நான்தான் கவுன்சிலர்...நீ வாடா...சென்னையில் போலீசை வசைபாடிய திமுக நபர் - சாட்டை சுழற்றுவாரா முதல்வர்
மனைவி கவுன்சிலராக இருந்தாலும் கணவர்தான் கவுன்சிலர் போல செயல்படுகின்றனர். காவல்துறையினரை மிரட்டியதோடு அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியுள்ளார்
சென்னை: நான்தான் கவுன்சிலர் என்று கூறியதோடு சென்னையில் காவல்துறையினரை அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியுள்ளார் பெண் கவுன்சிலரின் கணவர். சிறு தவறு செய்தாலும் தண்டிப்பேன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் அத்துமீறும் நிர்வாகிகள் மீது சாட்டையை சுழற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
பல்லாவரத்தில் பிரியாணி கடையில் பெண் கவுன்சிலரின் மைத்துனர் மாமூல் கேட்டு அடிதடியில் ஈடுபட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன் அடுத்த அட்ராசிட்டி ஆரம்பமாகிவிட்டது. கவுன்சிலர்களின் உறவினர்கள் அடுத்தடுத்து புகார்களில் சிக்கி வருகின்றனர்.
பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளித்து அவர்களை வெற்றி பெற வைத்து பதவியில் அமர வைத்தாலும் பெண் கவுன்சிலர்களின் கணவரும், உறவினர்களும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அடாவடியில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.

சென்னை ராயப்பேட்டை கவுன்சிலர்
புகாருக்கு ஆளான நபரின் பெயர் ஜெகதீசன், இவர் சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிரஞ்சனா என்பவரின் கணவராவார். சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார்.

காவல்துறை ரோந்து
ராயபுரம் பகுதியிலுள்ள ஜேபி கோவில் தெருவில் சக ஆதரவாளர்களுடன் நின்று கும்பலாக பேசிக் கொண்டிருந்தார் ஜெகதீனர். கூட்டத்தைப் பார்த்த உடன், அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது திடீரென கோபமடைந்து ஜெகதீசனும் உடன் இருந்தவர்களும் தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினர். நீங்க யாரு எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என்று காவல்துறையினர் கேட்டதற்கு நாங்க ரவுண்ட்ஸ்ல இருக்கோம் என்று சொன்னார் உடன் இருந்தவர்.

நான்தான் கவுன்சிலர்
யாரு கவுன்சிலர் என்று காவல்துறையினர் கேட்டகவே, நான் தான் கவுன்சிலர் என்றும் கூறினார் அவருடன் வந்த ஆதரவாளர்கள் சிலர் நாங்க என்ன ரவுடிகளா? என்று கூறி காவல்துறையினரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டினர். வா அடி வா... வீடியோ எடுத்து என்னா பண்ணப்போறான் என்று கேட்டார் கவுன்சிலரின் கணவர். இதைப் பார்த்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவிதான் கவுன்சிலர்
அவரது மனைவிதான் கவுன்சிலர் ஆனால் கணவரோ நான்தான் கவுன்சிலர் என்று கூறி காவலர்களை மிரட்டி உள்ளார் அதுமட்டுமல்லாமல் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியுள்ளார். பெண்களுக்கு அதிகமாக கவுன்சிலர் பதவிகளில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் கணவர்களோ நான்தான் கவுன்சிலர் என்று கூறி வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

நடவடிக்கை பாயுமா?
இது போன்ற செயல்கள் தமிழகத்தில் தற்போது அதிகமாகி கொண்டே இருக்கிறது. சிறு தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்று பதவியேற்பின் போதே கூறி எச்சரித்தார் முதல்வர் ஸ்டாலின், இதுபோன்று அடாவடிகளில் இறங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எண்ணமாக உள்ளது
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications