அறிக்கையே விட முடியாதோ! வைஷ்ணவியை வைத்தே விஜயை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக.. சம்பவம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே நடிகர் விஜய் அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். இனி அவர் அறிக்கையே வெளியிட முடியாது என்று சொல்லும் அளவிற்கு திமுக வைஷ்ணவி சிம்ம சொப்பனமாக மாற தொடங்கி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்த வைஷ்ணவி சமீபத்தில் திமுகவில் இணைத்தார். தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லை, கட்சிக்காக பணியாற்றியவர்களுக்கு மதிப்பு இல்லை, நீண்ட காலம் கட்சிக்காக வேலை செய்தவர்களுக்கு மதிப்பு இல்லை, முக்கியமாக பெண்களை மதிப்பதே இல்லை என்றெல்லாம் கடுமையான புகார்களை வைத்து வைஷ்ணவி வெளியே வந்தார்.
கடைசியில் வைஷ்ணவி வைத்த புகார்களை நிரூபிக்கும் விதமாக கடந்த 1 வாரமாக வைஷ்ணவி மீது ஆபாச தாக்குதல்களை இணையத்தில் விஜய் ரசிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். வைஷ்ணவிவை ஆபாசமாக திட்டுவது , அவரின் இன்ஸ்ட்டா பக்கத்தில் கடுமையாக அவரை விமர்சனம் செய்வது, மோசமாக கமெண்ட் செய்வது, உடல் உறுப்புகளை வைத்து பேசுவது, வீடியோக்களை எடிட் செய்து போடுவது என்று அத்துமீறி வருகின்றனர்.
அரசியல் என்று வந்துவிட்டாலே.. ஒரு கட்சியில் இருந்து ஒருவர் வெளியேறுவதும்.. வேறு கட்சிக்கு செல்வதும் சகஜம்தான். தவெகவில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா கூட அப்படிப்பட்டவர்தான். இந்த அரசியல் கூட தெரியாமல்.. இளம் பெண் ஒருவர் கட்சி மாறியதை சகித்துக்கொள்ள முடியாமல் வைஷ்ணவிவை கடுமையாக தாக்கி விஜயின் விர்ச்சுவல் வாரியர்ஸ் போஸ்டுகளை செய்து வந்தனர்.

வைஷ்ணவி சம்பவம்
இப்படிப்பட்ட நிலையில்தான் அதே வைஷ்ணவியை வைத்தே திமுக விஜய்க்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. விஜய் இதுவரை வெறும் அறிக்கை மட்டும் தானே வெளியிடுகிறார். அப்போது விஜய்க்கு அதே ஸ்டைலில் பதிலடி தருவோம் என்று வைஷ்ணவி களமிறக்கப்பட்டு உள்ளார். அவரும் நறுக்கென்று விஜயின் அறிக்கை ஒவ்வொன்றிலும் குறை கண்டுபிடித்து கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறார்.
உதாரணமாக, இத்தனை முறை தமிழக முதல்வர் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கும் நீங்கள் @TVKVijayHQ , ஏன் ஒருமுறைக் கூட பிரதமர் மோடி அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை? அரசியல் எதிரியின் பெயரை குறிப்பிட்ட உங்களுக்கு உங்கள் கொள்கை எதிரியின் பெயரை குறிப்பிடுவதில் என்ன தயக்கம்!? வருங்காலத்தில் பா.ஜ.க வுடன் நீங்கள் கூட்டணி வைப்பதில் சந்தேகம் இல்லை என்பது உங்கள் அறிக்கையிலேயே தெளிவாகத் தெரிகிறது. "முன்னாலே த.வெ.க, பின்னாலே பா.ஜ.க - இது மக்களை ஏமாற்றும் பி-ஸ்கிரீன் அரசியல்", என்றும்
பாதிக்கப்பட்ட கங்காவதி அவர்களின் பெயரை குறிப்பிட்ட உங்களுக்கு @TVKVijayHQ வயிற்றில் எட்டி உதைத்த காவலரின் பெயரை குறிப்பிட முடியவில்லையா!? ஆடைகளை கிழித்த அதிகாரியின் பெயர் தான் உங்களுக்கு தெரிவில்லையா!? மக்கள் போராட்டத்தையும் சட்டப் போராட்டத்தையும் கையில் எடுப்பேன் என்று கூறியுள்ளீர்கள். சட்டப் போராட்டத்தில் வெல்ல சாட்சி முக்கியம் தானே - இங்கே குற்றவாளியின் பெயரே இல்லை, காவல் துறையை பொத்தா பொதுவாக குறை கூறியுள்ளீர்கள். இது உங்க பட டீசர் மாதிரி இருக்கு... ஒலி அதிகம், ஆழம் கம்மி!, என்றும் பல அறிக்கைகளை வைஷ்ணவி வெளியிட்டுள்ளார்.
இதெல்லாம் வைஷ்ணவி விஜய்க்கு எதிராக செய்த போஸ்டுகளின் சாம்பிள். விஜய் அறிக்கை அரசியல் செய்கிறார். அதற்கும் நெருக்கடி கொடுப்போம் என்று வைஷ்ணவியை திமுக களமிறக்கி உள்ளது. அது சமூக வலைத்தளங்களிலும் பயனளிக்க தொடங்கி உள்ளது. வைஷ்ணவி தரும் பதிலடிகள் தவெக தரப்பை கடுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications