அப்பப்பா எவ்வளவு துரோகங்கள்.. காவிரி பற்றி பேசாமல் சென்ற ராகுல் காந்தி.. தயாநிதி மாறன் பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமை குறித்தோ, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் துரோகிகள் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதேபோல் பாஜகவின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெகவின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே என்றும் சாடியுள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு நாளில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசுகையில், பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள் என்றே அர்த்தம்.

DMK

தமிழக மக்களின் வாக்குகளை பறிக்கும் அதிகாரத்தை சதி திட்டத்துடன் தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜக கொண்டு வருகிறது. தமிழ்நாடு மக்கள் மீதும், தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதும் தாக்குதல் நடத்த யார் அனுமதித்தாலும் அவர்கள் நவீன கால எட்டப்பர்கள். 21ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்கள். எந்தவொரு தமிழரும் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க கூடாது என்று கூறினார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சு திமுகவை நோக்கிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. திமுகவை நோக்கி பாஜக வருவதாக பேச்சுகள் வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு வந்து தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேசி சென்றுள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேச்சிற்கு திமுக எம்பி தயாநிதி மாறன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தயாநிதி மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்! தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரியின் உரிமை குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்! காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் மேகதாது அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்!

நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள்! பாஜகவின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெகவின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!

ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே! டெல்லி போலீசுக்குச் சற்றும் குறைவில்லாமல், தமிழ்நாடு போலீசும் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது அராஜகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சமே!

தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது! அப்பப்பா... எவ்வளவு துரோகங்கள்! என்று பதிவிட்டுள்ளார். இது திமுகவினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+