Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

505க்கு வெறும் 66.. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக! கையில் புக்கோடு வந்த அன்புமணி ராமதாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2021-ல் திமுக கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும், திமுக வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக நிறைவேற்றியுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தியாகராய நகரில் ஆதாரங்களை வெளியிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

திமுக சொன்ன "விடியல் எங்கே?" என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ஆவணப் புத்தகத்தில், திமுக அளித்த வாக்குறுதிகளில் வெறும் 13 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி இருப்பதாகவும்.. மீதமுள்ள 87 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Anbumani Ramadoss DMK election Promises

அன்புமணி ராமதாஸ்

மேலும் நிறைவேற்றாத வாக்குறுதிகளை தனித்தனியாக தலைப்பிட்டு அன்புமணி புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில், தமிழ்நாட்டில் மூன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, கேஸ் மானியம் 100, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் இப்படி 87 சதவீத வாக்குறுதிகளை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை வாக்குறுதி எண் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

விடியல் எங்கே?

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி," ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற தி.மு.க அரசின் தோல்வியை ஆதாரப்பூர்வமாக ஒரு ஆவணமாக தயாரித்து இன்று அதை வெளியிட்டு இருக்கின்றோம். இந்த ஆதாரம் தான் இந்த விடியல் எங்கே என்ற ஆவணம். இந்த ஆவணத்தில் தி.மு.க-வுடைய தோல்விகள், அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் பொய் வாக்குறுதிகள் சொன்னார்கள் என்று ஆதாரத்துடன் இங்கே நாங்கள் நிரூபித்திருக்கின்றோம்.

திமுக அரசு

இது வெறும் பொய் குற்றச்சாட்டு கிடையாது, அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் தான். அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, இந்த வாக்குறுதிகள் அவர்கள் சொன்னது. இது போன்ற ஆவணங்களை பா.ம.க தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் இந்தியா வளர்ச்சிக்காக இதுவரை 47 ஆவணங்களை வெளியிட்டு இருக்கின்றோம். இது எங்களுக்கு மிகுந்த பெருமை. விடியல் எங்கே சரியான ஒரு தலைப்பு, தமிழ்நாட்டுக்கு விடியலை கொண்டு வருவோம் என்று சொன்ன தி.மு.க, இன்று இருண்ட தமிழகமாக இருக்கிறது.

தேர்தல் அறிக்கை

தி.மு.க தேர்தலுக்கு முன்பு அவர்கள் தேர்தல் அறிக்கையிலே கொடுத்த வாக்குறுதிகள் 505. அதில் அவர்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் 66, அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் 66. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் 373. நாங்கள் 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று ஒரு பொய்யை முதலமைச்சர் மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.

நிறைவேற்றாத வாக்குறுதி

439 வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசு 12.94% வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள 87% வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. விடியில் எங்கேயுமே இல்லை, அதை நிரூபித்திருக்கின்றோம். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அவர்களின் ஆசையை தூண்டி, 'வானத்தை வில்லாக வளைப்போம்' என நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளையும் பொய்யாக கூறி திமுக ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றி இருக்கிறது.

2026 தேர்தல்

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட 100க்கு 35 மதிப்பெண் எடுத்தால் தான் பாஸ் மார்க்.. ஆனால் திமுக 13 விழுக்காடு வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி, மக்கள் மன்றத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவிற்கு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+