கசப்பு மருந்துகள் “அதுக்குத்தான்”.. பெரிய திட்டத்துக்கு ரெடியான திமுக! இனி அவ்ளோதான்.. மாஸ் பிளான்!
சென்னை : நீண்டகாலமாக கேள்வி எழுப்பி வரும் எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கத் தயாராகிவிட்டதாம் திமுக அரசு. அதற்காகவே, தொடர்ச்சியாக மக்களுக்கு சில 'கசப்பு' மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதலே, குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பதுதான் திமுகவுக்கு எழுப்பப்படும் பிரதான கேள்வியாக இருக்கிறது.
அதிமுக, பாஜக என எதிர்க்கட்சிகளும் இந்த வாக்குறுதியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டே ஆளும் திமுக அரசை விமர்சித்து வருகின்றன.
பொதுமக்கள் மத்தியிலும், மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்களை எல்லாம் விட, இந்த மாதந்தோறும் ரூ. 1000 திட்டம் தான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நிதிச்சுமை
தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் பிரதானமாக பேசப்பட்டது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதி. இது பட்டிதொட்டி எங்கும் பரவியது. அதனால், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததுமே, பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழத்தொடங்கி விட்டது. ஆனால், அதற்கு பெரிய அளவில் நிதி தேவை இருப்பதால், அமல்படுத்த முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டது.

விலை உயர்வு
தமிழ்நாட்டின் நிதி நிலைமையை சீராக்கியபிறகு, 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுகவினர் தெரிவித்தனர். ஆனால், இந்த உரிமைத்தொகை திட்டத்திற்கான நிதியைத் திரட்டுவது தற்போதைய சூழலில் ஆகிற காரியமில்லை என நிதி அமைச்சர் ஆரம்பத்திலேயே கைவிரித்து விட்டாராம். ஆனால், இந்தத் திட்டத்தைக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லுங்கள் என முதல்வர் ஸ்டாலின் இதில் ஆர்வம் காட்டியதால், பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என பல வழிமுறைகளைக் கூறியுள்ளார் நிதி அமைச்சர்.

நிதி ஆதாரம்
கட்டணங்களை உயர்த்துவதில் முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை என்றாலும், உரிமைத்தொகை திட்டத்திற்கு நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டும் என்றால் இதெல்லாம் கட்டாயம் என நிதி அமைச்சரும், அதிகாரிகளும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனராம். அதையடுத்தே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவை அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

முதல்வர் கலக்கம்
இதுவே முதல்வருக்கு கவலை ஏற்படுத்திய நிலையில், ஆவின் பால் மற்றும் ஆவின் தயாரிப்புகளின் விலையையும் கணிசமாக அதிகரிக்க வேண்டும் என நிதி அமைச்சரிடம் இருந்து பரிந்துரை சென்றுள்ளது. ஆட்சிக்கு வந்த உடனே பால் விலையை 3 ரூபாய் குறைத்த நாமே எப்படி உயர்த்துவது என முதல்வர் யோசித்ததாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு நாமே பாயிண்ட் எடுத்துக் கொடுப்பது போல ஆகிவிடும் என கலக்கமடைந்திருக்கிறார்.

தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள்
ஆனால், தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. இப்போது விலையை உயர்த்தினால் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், இப்படியே போனால் சில மாதங்களில் இன்னும் கடுமையாக நிதி நிலைமை சிக்கலாகும், அப்போது ஏற்றினால், தேர்தலிலும் பாதிப்பைச் சந்திக்கக்கூடும் எனப் பேசி முதல்வர் ஸ்டாலினை சம்மதிக்க வைத்துள்ளனர். அந்தவகையில் தான் சமீபத்தில் ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வும் அரங்கேறியதாம்.

கசப்பு மருந்துகள்
ஆவின் விலை ஏற்றத்தில் பால்வளத்துறை அமைச்சருக்கே பெரிய உவப்பில்லை என்றாலும், வேறு வழியில்லாமல் அவர் ஒப்புக்கொண்டாராம். விலை உயர்வு தொடர்பாகப் பேசியுள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசர், நிதிச் சுமையால் தான் விலை ஏற்றப்பட்டிருக்கிறது என்பதை, எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்வு என இப்படி பொதுமக்களுக்கு பல்வேறு 'கசப்பு' மருந்துகளைக் கொடுப்பது, அந்த இனிப்பான செய்தியை அறிவிப்பதற்குத்தானாம்.

மார்ச் மாதம்
அதாவது, நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டிய வரக்கூடும் எனக் கூறப்படுவதால், வரும் மார்ச் மாதம் மகளிர் தினத்தில், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்து தேர்தலுக்கு தயராகி விடலாம் என்ற யோசனையில் உள்ளதாம் ஆளுங்கட்சி. அதற்கு முன்னதாகவே, பல்வேறு துறைகளின் மூலமாகவும் நிதிப் பெருக்கத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க
திமுக கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் பாதிக்கும் மேலானவற்றை நிறைவேற்றி விட்டதாக முதல்வர் உட்பட திமுகவினர் அனைவரும் கூறினாலும், இந்த உரிமைத் தொகை விவகாரத்தால், பொதுமக்களுக்கு திமுக மீது நம்பிக்கை ஏற்படவில்லையாம். எதிர்க்கட்சிகளும் அதையே பூதாகரமாக்குவதால், இன்னும் சில மாதங்களுக்குள் பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பது தான் திட்டமாம்.

உதயநிதி அறிவிப்பார்
இந்தத் திட்டம் தொடர்பாக, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை ஆய்வுக் கூட்டத்திலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் திட்டத்தை வரும் சட்டப்பேரவையில், உதயநிதி ஸ்டாலினே அறிவிக்கக்கூடும் என்கிறார்கள். இது புதிய அமைச்சருக்கு பெயர் கொடுக்கும் என்பதால், முதலமைச்சரும் அதே யோசனையில் தான் இருக்கிறாராம்.

நாளை ஆலோசனை
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக அமைச்சரவை மாற்றப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், நிலுவையில் உள்ள மசோதாக்கள், பொங்கல் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் திட்டம் ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications