இந்தியாவில் ஒரே கட்சி.. திமுக மட்டும்தான் இனி போட்டி.. பாஜகவிற்கு அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!
திமுகவின் தேர்தல் வெற்றி குறித்து வெளியாகி இருக்கும் புள்ளி விவரங்கள் எல்லாம் பாஜகவிற்கு அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
சென்னை: திமுகவின் தேர்தல் வெற்றி குறித்து வெளியாகி இருக்கும் புள்ளி விவரங்கள் எல்லாம் பாஜகவிற்கு அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தலில் பாஜக அசத்தல் வெற்றியை சுவைத்து இருக்கிறது. மொத்தம் 303 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது.
மாறாக காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே தனித்து வென்றுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி, லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

எல்லா கட்சிகளும்
இந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனக்கு போட்டியாக கருதிய எல்லா கட்சிகளையும் வீழத்திவிட்டது. பகுஜன சமாஜ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என அனைத்து கட்சிகளையும் பாஜக அசால்ட்டாக வீழத்திவிட்டது. திரிணாமுல் மட்டும் சில இடங்களில் வென்றுள்ளது. ஆனால் அந்த வெற்றியும் பெரிய வெற்றி இல்லை.

ஆனால் திமுக
ஆனால் யாரும் நினைக்காத அளவிற்கு பாஜகவிற்கு ஒரே போட்டியாக திமுக மாறி உள்ளது. ஆம், இந்திய அளவில் பாஜகவிற்கு தற்போது இருக்கும் ஒரே போட்டி காங்கிரஸ் கிடையாது. திமுகதான். ஆம் தற்போது திமுக லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது. அதே சமயம் வாக்கு சதவிகிதம் அடிப்படையில் திமுகதான் இரண்டாவது பெரிய கட்சி.

எப்படி பெரிது
திமுக மொத்தம் 20 தொகுதியில் போட்டியிட்டது. இதில் 20 தொகுதியிலும் வென்றுள்ளது. திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 3 கூட்டணி கட்சி வேட்பாளர்களும் வென்று இருக்கிறார்கள். மொத்தம் 23 தொகுதியில் திமுகவின் சின்னம் வென்றுள்ளது. இங்கு திமுக பெற்று இருக்கும் வாக்கு சதவிகிதத்தை வேறு எந்த கட்சியையம் எங்கும் பெறவில்லை.

திமுக வாக்கு சதவிகிதம்
திமுக கூட்டணி சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 52.88 % வாக்குகளை பெற்றுள்ளது . அதேபோல் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 3 பேர் 54.43% வாக்குகளை சராசரியாக பெற்று இருக்கிறார்கள். திமுக தனியாக சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 55.28 % வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் திமுக இருக்கும் 10 இடங்களில் 53.20% வாக்குகளை பெற்றுள்ளது.

வேறு கட்சி இல்லை
இதை போல இந்தியாவில் வேறு எந்த மாநில கட்சியும், எதிர்க்கட்சியும் வாக்குகளை பெறவில்லை. காங்கிரஸ் கட்சி கூட இத்தனை வாக்கு சதவீதங்களை பெறவில்லை. மத்திய பிரதேசத்தில் சில இடங்களில் மட்டும் காங்கிரஸ் 50% வாக்குகளை தாண்டியது. ஆனால் திமுக போல எல்லா இடங்களிலும் 50% வாக்குகளை காங்கிரஸ் கடக்கவில்லை.

பாஜக எப்படி
அதேபோல் இன்னொரு பக்கம் பாஜக மட்டும்தான் 50% வாக்குகளை பல இடங்களில் கடந்து இருக்கிறது. சில இடங்களில் இது 60% வாக்குகள். தென்னிந்தியாவில் பாஜக பெரும்பாலான தொகுதிகளில் 50% வாக்குகளை கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக பாஜக 50% வாக்குகளை கடந்து இந்த முறையும் சாதனை படைத்து இருக்கிறது.

ஒரே போட்டி
இதன் மூலம் பாஜக கட்சிக்கு எதிரான மிகப்பெரிய கட்சியாக திமுக உருவெடுத்து இருக்கிறது.ஆம் வாக்கு சதவிகிதத்தை அடிப்படையில் திமுக என்ற மாநில கட்சிதான் தற்போது பாஜகவிற்கு ஒரே போட்டி. திமுகவிற்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்து இருக்கிறார்கள் என்பது இந்த தேர்தல் மூலம் தெளிவாகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications