கொரோனா சமயத்தில் சாதி அடிப்படையில் மாணவர்கள் பிரிப்பு.. தீண்டாமை தொடர திமுகவே காரணம்! பாயும் ஓபிஎஸ்
சென்னை: பாஞ்சாகுளத்தில் ஊர் கட்டுப்பாடு காரணமாகச் சிறுவனுக்குக் கடைக்காரர் ஒருவர் மிட்டாய் தர மறுத்த சம்பவத்தில் திமுக அரசைச் சாடி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாகுளத்தில் சிறுவனுக்குக் கடைக்காரர் ஒருவர் மிட்டாய் தர மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊர் கட்டுப்பாடு காரணமாகப் பட்டியலின சிறுவர்களுக்குக் கடைக்காரர் மிட்டாய் தர மறுத்ததுள்ளார்.
இதுமட்டுமின்றி தங்கள் பள்ளிகளிலும் கூட தீண்டாமை நிலவுவதாகவும் தங்களைக் கீழே அமர வைப்பதாகவும் அந்த சிறுவர்கள் புகார் கூறி இருந்தனர்.

ஓபிஎஸ்
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தீண்டாமை அதிகரிக்கத் தமிழக அரசே காரணம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாடியுள்ளார். இது குறிக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது. "சாதி இரண்டொழிய வேறில்லை" என்றார் ஒளவை பிராட்டியார். "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடினார் மகாகவி பாரதியார்.

சாதி அடிப்படையில்
இப்படி சாதிக்கு எதிராகப் போராடியவர்கள் வாழ்ந்த தமிழ் மண்ணில், தீண்டாமை சட்டப்படி ஒழிக்கப்பட்டும், ஆங்காங்கே தலைகாட்டுவது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கொரோனாத் தொற்று நோய் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு சுழற்சி முறையில் சாதி அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பாடம் எடுக்கப்பட்டது; ஒரு சில பள்ளிகளில் வருகைப் பதிவேடு சாதி அடிப்படையில் பராமரிக்கப்பட்டது; சில பள்ளிகளில் கை மணிக்கட்டில் கயிறு கட்டப்பட்டது; இதன் காரணமாக ஒரு மாணவன் உயிரிழந்தது எனப் பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.

பாஞ்சாகுளம் சம்பவம்
இந்த வரிசையில், தற்போது தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே பாஞ்சாகுளத்தில் ஒரு சிறுவனுக்கு மிட்டாய் தர மறுத்த சம்பவம், தந்தை பெரியார் பிறந்த தினத்திலிருந்து கைபேசிகளில் வரலாகப் பரவிக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றுமறியா பிஞ்சு உள்ளத்தில் சா'தீ'யை விதைப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இதை எண்ணும்போது மனித இனம் தலைகுனிய வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை கடமை
இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வியைப் போதிப்பது மட்டுமின்றி, அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும், மாணவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாகச் செயல்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பள்ளிக் கல்வித் துறையின் தலையாய கடமையாகும்.

திமுகவே காரணம்
ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் இதைச் செய்ய திமுக அரசு தவறிவிட்டது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சட்டப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும், தமிழ்நாட்டில் ஆங்காங்கே தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இது தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்குக் காரணம் திமுக அரசின் அலட்சியப் போக்கே என்று சொன்னால் அது மிகையாகாது. சட்டப்படி இதனை ஒழிக்க ஒருபுறம் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ஊர்ப் பெரியவர்களை அழைத்துப் பேசி, அனைத்துத் தரப்பு மக்களிடையே இதுகுறித்த மாற்றத்தை உருவாக்க வேண்டியதும் அரசின் கடமையாகும்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல், ஒரு பாவச் செயல், ஒரு குற்றம் என்பதை அனைவரும் உணரும் வகையிலும், எல்லோரையும் சகோதர, சகோதரிகளாகப் பாவிக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரின் மனங்களில் நிலைநிறுத்தும் வகையிலும், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையை அனைவரும் பின்பற்றும் வகையிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால்தான் தீண்டாமை ஒழிப்பு என்பது முற்றிலும் அகற்றப்படும். இல்லையெனில், சாதி மோதல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிவிடும் சூழ்நிலை உருவாகும். இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டிற்கு நல்லதல்ல.

நடவடிக்கை தேவை
எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சாதி மோதல்களைத் தவிர்க்க அறிவுரைகள் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் தேவையான ஆலோசனைகளைப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்து உள்ளார்.
-
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்












Click it and Unblock the Notifications