மதுராந்தகம் தொடங்கி கோவை வரை நேற்று ஒரே நாளில் நடந்த குற்றங்கள்! திமுக ஐடி விங் லிஸ்ட் அவுட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு நேற்று ஒரே நாளில் நடந்த குற்றச்சம்பவங்களை திமுக ஐடி விங் பட்டியலிட்டு டம்மி முதல்வர் என விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து திமுக ஐடி விங் சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது!

dmk it wing tamil nadu

மதுராந்தகம், தேனி, சென்னை கொழுமணிவாக்கம், சேலம், புதுக்கோட்டை மற்றும் கோவை எனத் தொடரும் குற்றச் சம்பவங்களே த.வெ.க அரசின் நிர்வாகத் தோல்விக்குச் சாட்சி. இவ்வாறு குறிப்பிட்ட திமுக ஐடி விங், நேற்று ஒரு நாளில் நடந்த குற்றங்கள் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதில் மதுராந்கத்தில் கொங்கரைமாம்பட்டு பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அது போல் தேனி கருநாக்கமுத்தன்பட்டியில் தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்று தலையை துண்டித்ததாக மகன் மீது குற்றம்சாட்டப்பட்டது. சென்னையை அடுத்த கொழுமணிவாக்கத்தில் காதலிக்கு செல்போனில் தொல்லை கொடுத்ததாக கூறி நண்பரை 2 இளைஞர்கள் கொலை செய்து உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசியதாக புகாரின் பேரில் இருவர் போலீஸில் சரணடைந்தனர்.

அது போல் சேலம் மாவட்டம் செங்கல்பேட்டை பகுதியில் பைக் திருடனை பிடிக்க முயன்றபோது வாகன உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் தற்கொலை என கூறப்பட்ட தவெக நிர்வாகி சூரியபிரகாஷ் மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டு அவரது மனைவி சரண்யா கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

dmk it wing tamil nadu

அது போல் கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் வாகன சோதனையில் நிற்காமல் சென்ற கார் மீது படுத்துக் கொண்ட தலைமைக் காவலர், சுமார் 40 கி.மீ. தாண்டி அந்த கார் சக போலீஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டது. அப்போது அந்த காரில் சோதனை செய்த போது 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தவர் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தவெக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து திமுக ஐடி விங்கும், மகளிரணியும் விமர்சித்து வருகிறார்கள். அது போல் மதுராந்தகத்தில் விஜய்யை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்களையும் திமுக ஐடி விங் குறிப்பிட்டுள்ளது.

திமுக மகளிரணியோ, மதுராந்தகத்தில் விஜய் பேசிய பேச்சுக்களில் எது உண்மை, எது பொய் என்பதை அலறி அடித்து அலறும் ஒரு கருவியை வைத்து கிண்டல் செய்தது. அது போல் தவெகவையும் அதன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என ஒருவர் விடாமல் திமுக விமர்சித்த வண்ணம் உள்ளது.

மதுராந்தகத்தில் ஓம் காளி ஜெய்காளி தவெக ஒரு ஓடுகாலி என கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+