உள்ளாட்சி தேர்தல்.. இதுதான் முக்கியம்.. ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை : கோட்டையில் கையெழுத்திட்டு அறிவிக்கப்படும் திட்டங்கள் மக்களிடம் சென்றுசேர, உள்ளாட்சி நிர்வாகத்தில் திமுகவினர் இடம் பிடிப்பது முக்கியம் என அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தான் விருப்பிய மாற்றங்கள் நடக்கும் என தொண்டர்களை மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
எந்தவிதப் பதவிகளுக்கும் வராமல், எதற்கும் ஆசைப்படாமல், தொண்டன் என்ற நிலையிலிருந்து பணியாற்றியவர்களால் தான் திமுக ஆட்சி தமிழகத்தில் உருவாகி உள்ளதாக பெருமிதப்பட்ட ஸ்டாலின், தமிழகத்தில் நிரந்தமாக திமுக ஆட்சி அமைக்க இந்த ஆட்சி அடித்தளமாக அமைய வேண்டும் என விரும்புகிறார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழாவில், விருதுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொண்டர்கள் காரணம்
அப்போது ஸ்டாலின் பேசும் போது தொண்டர்களை வெகுவாக உற்சாகப்படுத்தினார். "உங்களுடைய வியர்வையால், ரத்தத்தால், உழைப்பால், தியாகத்தால் கிடைத்த வெற்றிதான் இந்த வெற்றி. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் உழைத்த உழைப்பின் காரணமாகத்தான், திமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. எந்தவிதப் பதவிகளுக்கும் வராமல், எதற்கும் ஆசைப்படாமல், தொண்டன் என்ற நிலையிலிருந்து பணியாற்றிய இவர்களால்தான் இந்த ஆட்சி உருவாகியிருக்கிறது. அத்தகைய தொண்டர்களுக்கு மீண்டும் மீண்டும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ஸ்டாலின் வேண்டுகோள்
அதேபோல் தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்னும் வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின், அதற்கு 9 மாவட்டங்களில் வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், அதன்பிறகு வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

உள்ளாட்சி தேர்தல்
ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாகவும் இனி வருகிற ஒவ்வொரு மாதத்திலும் திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறிய ஸ்டாலின், கோட்டையில் கையெழுத்திட்டு அறிவிக்கப்படும் திட்டங்கள் மக்களிடம் சென்றுசேர, உள்ளாட்சி நிர்வாகத்தில் திமுகவினர் இடம் பிடிப்பது முக்கியம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

உத்தரவு
அதாவது உள்ளாட்சி தேர்தல் வெற்றியை ஸ்டாலின் வெகுவாக எதிர்பார்க்கிறார். இந்த முறை பாமக, தேமுதிக, அதிமுக, மநீம என ஒவ்வொரு எதிர்க்கட்சிகளுமே தனித்து போட்டியிடுவதால் திமுகவிற்கு சாகதமாக இருக்கும் என்று கருத்து உள்ளது. இந்த சூழலில் அலட்சியம் காட்டாமல் வெற்றி பெற வேண்டும் என்று திமுகவினருக்கு ஸ்டாலின உத்தரவிட்டுள்ளார்
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications