சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புது ரூட்டில்.. சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் பாஜகவுக்கு கொட்டு வைக்கும் திமுக.. பிளான் தெளிவாய்ருச்சு

பாஜகவுக்கு எதிரான அறிவிப்புகளை திமுக வெளியிட்டு வருகிறதா

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவுக்கு எதிராக வெளிப்படையாக நடவடிக்கை எடுக்காதது போல தோன்றினாலும் கூட பாஜகவையும் கூட தனது லிஸ்ட்டில் வைத்துள்ளது திமுக என்பதை சில நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

மிகப்பெரிய நெருக்கடியான நேரத்தில்தான் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார் ஸ்டாலின்.. கொரோனா தொற்று பாதிப்பு என்பது, ஒரு மாநிலத்துக்கு சுகாதார நெருக்கடியை மட்டும் தந்துவிடுவதில்லை..

மாறாக, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்துவதாக உள்ளது. அந்த வகையில், ஒரு பக்கம் நோய், மறுபக்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஸ்டாலின் ஆளாகி உள்ளார்.

 நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

என்னதான் மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், தடுப்பூசிகள், நிதி ஒதுக்கீடு என்று வரும்போது, அது மத்திய அரசின் கையில் உள்ளது.. கடந்த காலங்களில் இருந்து இப்போது வரை, பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது திமுக.. கொள்கை அளவிலும் முரண்பாடு கொண்ட கட்சி.. அதனால், மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது என்பது ஸ்டாலின் முன்புள்ள மற்றொரு சவால்.

 மாநில உரிமை

மாநில உரிமை

கொள்கை ரீதியாகவும் எதிர்கொண்டு, மாநில உரிமைகளையும் பெற்று தர வேண்டிய நிலைமை திமுக அரசுக்கு உள்ளது.. ஸ்டாலினிடம் திறமையான அமைச்சர்கள் கையில் இருந்தாலும், மிஸ்டர் கிளீன் என்று சொல்லப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் சுற்றி இருந்தாலும், பாஜகவை ஒரேயடியாக சீண்ட முடியாத நிலைமையில் தற்சமயம் உள்ளது.

 ஊழல் புள்ளிகள்

ஊழல் புள்ளிகள்

ஊழல் புரிந்த அதிமுக புள்ளிகள் மீதான, வழக்குகளை தூசி தட்டி எடுக்க போவதாக திமுக சொல்லி வந்தாலும், பாஜகவை கண்டிக்க வேண்டிய விஷயங்களில் தவறகூடாது என்பதிலும் திமுக உறுதியாக உள்ளது.. அதற்கு 2 உதாரணங்களை நேற்று நடந்த சம்பவங்களை வைத்தே சொல்லலாம்.

 ஹத்ராஸ்

ஹத்ராஸ்

உபி ஹத்ராஸ் சம்பவத்தை திமுக கையில் எடுத்துள்ளது.. ஹாத்ராசில் தலித் சமூகத்தை சார்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலையும் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.. இந்த பெண்ணின் பெற்றோருடைய தொலைபேசிகளை உபி போலீசார் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்டு கசிய விட்டுள்ளனர்.. அதேபோல, இவர்களிடம் பேசிய ஊடகவியலாளர்களின் போன்களும் ஒட்டுக் கேட்கப் பட்டுள்ளன.

திமுக

திமுக

இந்த சம்பவத்தில், பெண் ஊடகவியலாளர்களை கண்ணியக் குறைவாகவும் போலீசார் நடத்தி உள்ளனர்.. இந்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமையிலான ஊடகக் கண்காணிப்புக் குழு கண்டன தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது..

 தீர்மானம்

தீர்மானம்

அதேபோலதான், டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. இதுவும் பாஜக மேலிடத்தையே அசைத்து பார்க்கும் விஷயமாகும்..!

பாஜக

பாஜக

அதாவது மக்கள் நலன் என்ற ரூட்டிலேயே சென்று பாஜகவை பலவீனப்படுத்தும் முயற்சியில்தான் திமுக தற்போது இறங்கி வருவதாக சொல்லப்படுகிறது.. எனினும் இதையெல்லாம் பாஜக தரப்பு கவனிக்காமல் இல்லை..

Recommended Video

    முக்கிய புள்ளியை தட்டி தூக்க செம போட்டி.. திமுகவா? பாஜகவா? | Oneindia Tamil
     காய் நகர்த்தல்கள்

    காய் நகர்த்தல்கள்

    இப்போதைக்கு பாஜகவுக்கு, அதிமுக தயவு தேவையில்லை என்றாலும், திமுகவை ஒரேயடியாக பகைத்து கொள்ளவும், உரசி பார்க்கவும் விருப்பம் இல்லை.. அதுமட்டுமல்லாமல், 2019 தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின், எப்போதுமில்லாமல், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்ததையும் மறக்கவில்லை.. அதனால் திமுகவுக்கு எதிரான காய் நகர்த்தல்களும் மெல்ல ஆரம்பமாகும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. பார்ப்போம்..!

    English summary
    DMK Led Media monitoring committee condemns resolution against UP Gov
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X