• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

போன வருஷம் வெற்றிவேல் வீரவேல்னு சொன்னவங்க இப்ப எங்க போனாங்க? - அமைச்சர் சேகர்பாபு கிண்டல்

Google Oneindia Tamil News

சென்னை : கடந்த ஆண்டு தைப்பூச நேரத்தில் மேலே தூக்கிக் கொண்டு வெற்றிவேல் வீரவேல் என மாவட்டம் மாவட்டமாக சுற்றி வந்தவர்கள் இந்த ஆண்டு வேலைப் பற்றி ஏதாவது கவலைப்பட்டார்களா என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்

இந்தாண்டு கொரோனா காரணமாக வழிபாட்டுத் தலங்களை பொது மக்கள் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

சங்க கால மதுரையை நவீனகால மதுரையாக உருவாக்கியது திமுக அரசு - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் சங்க கால மதுரையை நவீனகால மதுரையாக உருவாக்கியது திமுக அரசு - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திமுக இந்துக்கள் விஷயத்தில் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி நிலையில், இறை அன்பர்கள் விரும்புகின்ற, இறை வழி பாட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்த தரும் நோக்கம் கொண்டவர் தான் தமிழக முதலமைச்சர் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு முடிவடைந்த மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் ஆய்வு நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவரிடம் தமிழகத்தில் கோயில்களை திறக்க வேண்டுமென பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இறை அன்பர்கள் விரும்புகின்ற இறை வழிபாட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்த தரும் நோக்கம் கொண்டவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் எனவும் ஜனவரி 1-ஆம் தேதி ஆண்டின் முதல் நாள் என்பதால் இருந்த நிலையிலும் பொதுமக்கள் மனச்சோர்வு அடையக் கூடாது என்பதற்காக வழிபாட்டுத் தலங்களை மக்களுக்கு முதலமைச்சர் அனுமதி அளித்ததாக கூறினார்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

தற்போது கொரோனா பரவலின் மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதால் தைப்பூசத் திருநாளில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் கருத்தில் கொண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் இல்லங்களிலிருந்து வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என அழைக்கப்பட்டதாகவும் இறை தரிசனத்தை விட முக்கியமானது என்றும் அந்த உயிர் காப்பாற்றப்பட வேண்டும் தோற்று பரவக் கூடாது என்பதால்தான் மருத்துவ வல்லுநர் குழு ஆராய்ந்து மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயில்களை மூடும் முடிவை எடுத்ததாக கூறினார்.

வெற்றிவேல், வீரவேல்

வெற்றிவேல், வீரவேல்

மேலும் கோயில்களை திமுக திட்டமிட்டு முடுவதாக கருத்துக்களை கூறும் அரசியல் தலைவர்களிடம் தான் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால் கடந்த ஆண்டு தைப்பூச நேரத்தில் மேலே தூக்கிக் கொண்டு மாவட்டமாக சுற்றி வந்தவர்கள் இந்த ஆண்டு வேதனையைப் பற்றி ஏதாவது கவலைப்படவும் வெற்றிவேல் என்றவர்கள் வீரவேல் என்றவர்கள், இந்தாண்டு அந்த வேல்கள் தமிழ்நாட்டில் எங்காவது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய அவர், தற்போது அவர்கள் வேல் புகைப்படங்களை டுவிட்டரில் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

உரிய நடவடிக்கை

உரிய நடவடிக்கை

அனைத்து மதமும் சம்மதம், இறை அன்பர்கள் விரும்புகின்ற இறை வழிபாட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் நோக்கம் கொண்டவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் , தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்து அறநிலையத்துறையின் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்த கருத்து, அவரவர் விரும்பும் வழிபாட்டுக்கு எந்த வகையிலும் இடையூறு இருக்கக் கூடாது எனவும் சுதந்திரமாக வழிபாடுகளில் ஈடுபட அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறினார்.

English summary
Minister Sekarbabu has questioned whether those who came around the district as Vetrivel veeravel by lifting themselves up during Thaipusam last year were worried about vel on this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X