ஆஜராக டைம் கேட்கும் செந்தில் பாலாஜி.. அமலாக்க துறையின் திடீர் ஆக்ஷனுக்கு காரணம் 'அவர்களா'?பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை நிகழ்வில் பங்கேற்கவுள்ளதால் அமலாக்கத்துறை முன் ஆஜராக ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார்.

Recommended Video

    ஒன்னுமே இல்ல.. SP Velumani-யின் வழக்கறிஞர் பாபு முருகவேல் விளக்கம் | DVAC Raid | Oneindia Tamil

    போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகப் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், சட்டசபை நிகழ்வுகளைக் காரணம் காட்டி அமலாக்கத்துறை முன் ஆஜராகக் கால அவகாசம் கேட்டு செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார்.

    ஊழல் புகார்

    ஊழல் புகார்

    சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் அனைத்து அதிமுக அமைச்சர்களும் பல கோடி ஊழல் செய்துள்ளதாகவும், திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களுக்கு எதிரான முறையான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தொடர்ந்து பேசினார். திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்ததால், அப்போது மற்ற நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை,

    விஜயபாஸ்கர்

    விஜயபாஸ்கர்

    கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பிறகு முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களைத் தூசி தட்டி எடுத்து, நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது திமுக அரசு. அதில் முதல் டார்க்கெட் எம் ஆர் விஜயபாஸ்கர் தான். கடந்த சில வாரங்களுக்கு முன் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போதே இந்த ரெய்டுக்கு பின்னால் இருப்பவர் தற்போது மின் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி தான் என்று கூறப்பட்டது.

    அதிமுக தலைமை

    அதிமுக தலைமை

    இந்த ரெய்டு நடந்து சில நாட்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் டெல்லிக்குச் சென்றனர். அப்போது இந்த ரெய்டு குறித்து பாஜக முக்கிய தலைவர்களிடம் அதிமுக தலைமை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சொல்லி வைத்தார் போல அதற்குப் பின்னரே செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளை அமலாக்கத் துறையினர் தீவிரப்படுத்தினர்.

    என்ன புகார்

    என்ன புகார்

    தமிழ்நாடு மின் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, இதற்கு முன் அதிமுக மற்றும் அமமுகவில் இருந்தவர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 2011-15 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி 33 பேரிடம் சுமார் 2.8 கோடி ரூபாய் வரை பெற்று பண மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

    வழக்கு ரத்து

    வழக்கு ரத்து


    இதில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளைப் பதிவு பதிவு செய்தனர். இதில் ஒரு வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர். கடந்த 8ஆம் தேதி இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைவரும் எதிர்பார்த்தை போலவே செந்தில் பாலாஜிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லை. அதேபோல பணம் கொடுத்து ஏமாந்ததாகப் புகார் அளித்தவருக்குச் செந்தில் பாலாஜி பணத்தைத் திருப்பி அளித்ததாக தெரிவிக்கவிட்டது. இதையடுத்து அந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

    அமலாக்கத் துறையினர்

    அமலாக்கத் துறையினர்

    இந்தச் சூழலில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த எப்ஃஐஆர் அடிப்படையில் மத்திய அரசின் அமலாக்கத் துறையும் முறைகேடான பணப்பரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தது. மேலும், இது தொடர்பான விசாரணைக்காக மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி

    அமைச்சர் செந்தில் பாலாஜி

    இருப்பினும், அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை முன் ஆஜராக ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார். சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்பதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருவதாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமலாக்கத் துறையின் சம்மனை ரத்து செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+