வனப் பணி தேர்வில் நாட்டிலேயே 10வது இடம் பிடித்த தமிழக மாணவி திவ்யா.. கனிமொழி எம்.பி. வாழ்த்து
சென்னை: ஐஎப்எஸ் (வனப்பணி) தேர்வு முடிவு நேற்றிரவு வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 89 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், 10வது இடம் பிடித்து அசத்தியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த திவ்யா.
இவருக்கு திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டர் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) இந்திய வனப் பணிக்கான 89 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து முதல் நிலை, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடந்தது.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. புனித் ராஜ்குமாரின் அன்பை கண்டு.. நெகிழ வைக்கும் வீடியோ.

வனப் பணி
இந்த நிலையில் நேர்முக தேர்வு நிறைவடைந்து யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் நேற்று இரவு, இறுதி தேர்வு முடிவை வெளியிடப்பட்டது. இதில், இந்தியா முழுவதும் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

6 பேர் தமிழ்நாடு
யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.inல் நேற்று இரவு வெளியிட்டது. இந்திய அளவில் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தேர்ச்சி பெற்ற 89 பேரில் 50 பேர் ஒரே ஒரு தனியார் ஐஏஎஸ் அகடாமி மாணவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, டெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம் மையங்களில் இவர்கள் படித்தவர்கள்.

முதலிடம் கேரளா
கேரளாவை சேர்ந்த சூரஜ் பென் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலாம் இடத்தையும், ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வித்யாதரி என்ற மாணவி 2ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

தமிழக மாணவி
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சேர்ந்த திவ்யா என்ற மாணவி இந்திய அளவில் 10ம் இடத்தையும், தமிழ்நாட்டில் முதல் இடத்தையும் பிடித்து அசத்தினார்.

கனிமொழி வாழ்த்து
இதனிடையே, கனிமொழி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மாநிலத்தில் முதலிடமும் இந்திய அளவில் 10ம் இடமும் பெற்று, இந்திய வனப்பணி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற திவ்யா அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications