சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவும் அதிமுகவும் வேறு வேறு இல்லை.. மனதில் கொள்ளுங்கள்.. கனிமொழி பிரச்சாரம்

Google Oneindia Tamil News

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாக்குகள் சேகரித்தார்.

Recommended Video

    பாஜகவும் அதிமுகவும் வேறு வேறு இல்லை.. மனதில் கொள்ளுங்கள்.. கனிமொழி பிரச்சாரம்

    திருவொற்றியூரில் முதலாவது இடத்தில் 7-வது வார்டில் போட்டியிடும் கோமளவள்ளியை ஆதரித்தும் இரண்டாவது இடமாக சத்தியமூர்த்தி நகரில் மேடையில் 6வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சாமுவேல் திரவியம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 4 வது வார்டில் போட்டியிடும் ஜெயராமன் மற்றும் 5 வது வார்டில் போட்டியிடும் திமுகவைச் சார்ந்த சொக்கலிங்கத்தை ஆதரித்து வாக்குகளை சேகரித்தார்.

    அப்போது மேடையில் பேசும் பொழுது கடந்த ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடிய திமுகவினர் மீதும் பெண்கள் மீதும் மாணவர்கள் மீதும் அதிமுக வழக்குகளை போட்டது.

    பெண்கள் சென்டிமென்ட்.. கேட்ச் செய்த திமுக.. பாயிண்ட் டூ பாயிண்ட் வைக்கும் புதிய தேர்தல் விளம்பரம்! பெண்கள் சென்டிமென்ட்.. கேட்ச் செய்த திமுக.. பாயிண்ட் டூ பாயிண்ட் வைக்கும் புதிய தேர்தல் விளம்பரம்!

    அதிமுக

    அதிமுக

    ஆகையால் பாரதிய ஜனதா கட்சியும் அதிமுகவும் வேறு வேறு இல்லை என்பதை மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒன்பது மாதங்கள் ஆகின்றது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.

    ஆட்டோ மானிய விலை

    ஆட்டோ மானிய விலை

    ஆனால் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக ஆட்சியில் அளித்த தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட செல்போன் மக்களுக்கு வழங்கப்படவில்லை, பால் விலை குறைக்கப்படவில்லை, ஆட்டோ மானிய விலையில் வழங்கப்படும் என்று கூறினார்கள், ஆனால் அதுவும் வழங்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    இலவச பயணம்

    இலவச பயணம்

    மேலும் கொரோனா காலத்தில் மக்களுக்கு கடந்த ஆட்சியில் ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றால் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அனைத்து மக்களுக்கும் 4000 ரூபாய் வழங்கப்பட்டது. பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    அரசு பணியிடங்கள்

    அரசு பணியிடங்கள்

    அரசு பணியிடங்களில் 40% பெண்களுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதனையும் நிறைவேற்றியுள்ளார் இதையெல்லாம் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதே போல் சென்னையில் ராயபுரம், விருகம்பாக்கம் வேட்பாளர்களையும் ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் செய்திருந்தார்.

    English summary
    DMK MP Kanimozhi in her election campaign at Chennai says that BJP and AIADMK are not same.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X