சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் வருகை.. பேச்சை ‘சட்டென’ நிறுத்திவிட்டு.. ஓடிச் சென்று கையைப் பிடித்து அழைத்து வந்த கனிமொழி!

Google Oneindia Tamil News

சென்னை : மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சர் துரைமுருகன் திடீரென நிகழ்ச்சிக்கு வந்ததைப் பார்த்த திமுக எம்.பி கனிமொழி, பேச்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்று அவரை கையைப் பிடித்து மேடைக்கு அழைத்து வந்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4வது நினைவு நாளையொட்டி, திமுக மகளிரணி சார்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் திடீரென நிகழ்ச்சிக்கு வந்து கீழே அமர்ந்ததைப் பார்த்து, பேசிக்கொண்டிருந்ததை விட்டுவிட்டு ஓடிச்சென்று மேடைக்கு அழைத்து வந்தது அங்கு குழுமியிருந்த உடன்பிறப்புகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சீமானுடன் இணைந்து செயல்படுவீர்களா? பட்டென வேல்முருகன் சொன்ன பதில்.. டக்கென திரும்பிப் பார்த்த 'தலை’! சீமானுடன் இணைந்து செயல்படுவீர்களா? பட்டென வேல்முருகன் சொன்ன பதில்.. டக்கென திரும்பிப் பார்த்த 'தலை’!

கருணாநிதி நினைவு நாள்

கருணாநிதி நினைவு நாள்

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியாகச் சென்ற திமுகவினர், அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மகளிரணி கருத்தரங்கு

மகளிரணி கருத்தரங்கு

கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுக மகளிரணி சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் க.பொன்முடி, கீதா ஜீவன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், விசிக எம்.பி ரவிக்குமார், திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கனிமொழி பேசியபோது

கனிமொழி பேசியபோது

இந்த கருத்தரங்கில், திமுக எம்.பி கனிமொழி பேசிக்கொண்டிருந்தபோது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென நிகழ்ச்சிக்கு வந்தார். இதைப் பார்த்த கனிமொழி பேச்சை நிறுத்திவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று "மேடைக்கு வாங்க" எனக் கூப்பிட்டார். அமைச்சர் துரைமுருகன் இங்கேயே இருந்து பார்க்கிறேன் எனக் கூறியும் கேட்காமல், வற்புறுத்தி கையைப் பிடித்து மேடைக்கு அழைத்து வந்தார்.

கீழே இறங்கிச் சென்று

கீழே இறங்கிச் சென்று

மேடையில் பேசிக்கொண்டிருந்த கனிமொழி எம்.பி, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வந்திருப்பதைப் பார்த்ததும் உடனே பேச்சை நிறுத்திவிட்டு, மேடையைவிட்டு கீழே இறங்கி வந்து துரைமுருகனை கைகளைப் பிடித்து மேடைக்கு வருமாறு அழைத்தார். துரைமுருகன் பரவாயில்லை இங்கேயே அமர்ந்துகொள்கிறேன் என்று கூறியும் கனிமொழி விடாமல், அவரை கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்த பிறகு தான் பேசத் தொடங்கினார்.

உடன்பிறப்புகள் நெகிழ்ச்சி

உடன்பிறப்புகள் நெகிழ்ச்சி

திமுக எம்.பி கனிமொழி, திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகனுக்கு அளித்த மரியாதை அங்கு குழுமியிருந்த அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கனிமொழி, பேச்சை நிறுத்திவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று துரைமுருகனை மேடைக்கு அழைத்து வந்த வீடியோவை உடன்பிறப்புகள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Recommended Video

    State government அ கேக்காம எப்படி முடிவெடுத்தீங்க? *Politics
    துரைமுருகன் நெகிழ்ச்சி

    துரைமுருகன் நெகிழ்ச்சி

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "இன்னும் 50 வருடத்திற்கு இந்த இயக்கத்தை எவனாலும் அசைக்க முடியாததாக அமைத்துவிட்டு சென்று இருக்கிறார் கருணாநிதி. தான் சொன்ன கருத்துகளில் தவறு இருந்திருந்தால் தன் தொண்டனிடமே மன்னிப்பு கேட்கும் ஒரே மகத்தான தலைவர் கருணாநிதி. இதுபோல் ஒரு தலைவன் இந்தியாவிலேயே எவனும் இல்லை. கனிமொழி தெய்வம் இல்லை என்று சொல்லும். ஆனால் தலைவர் கருணாநிதி ஒரு தெய்வம் தான்" என நெகிழ்ந்துபோய் பேசினார்.

    English summary
    At the 4th anniversary function of former Chief Minister Karunanidhi, when DMK MP Kanimozhi was speaking, when he saw Minister Duraimurugan suddenly come to the program, he stopped the speech and went down from the stage and brought Duraimurugan to the stage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X