சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுக்குத்தான் மீட்டிங்கா? சட்டமன்றத்தில் எடப்பாடிக்கு 'ஸ்கெட்ச்’ போடும் திமுக! கதிகலங்கும் ‘மாஜி’!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் மிக குறுகிய காலமே கூட்டத் தொடர் நடந்தாலும் அதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான முக்கிய சில விஷயங்கள் முன்வைக்கப்பட இருப்பதாகவும், இதன் காரணமாகவே அதனை சமாளிக்க எடப்பாடி எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி இருப்பதாக கூறுகின்றனர் அதிமுகவினர்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார். 17ஆம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்று கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும்.

அதற்கு பிறகு துணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளியாகும். அதே நேரத்தில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடர் குறுகிய காலமே நடக்கும் எனவும் கூறப்படுகிறது.

குழிதோண்டி புதைக்க முயற்சி.. பொதுச்செயலாளர் ஆக முடியாது.. எடப்பாடி பழனிச்சாமியை சாடும் புகழேந்தி குழிதோண்டி புதைக்க முயற்சி.. பொதுச்செயலாளர் ஆக முடியாது.. எடப்பாடி பழனிச்சாமியை சாடும் புகழேந்தி

 சட்டமன்ற கூட்டத் தொடர்

சட்டமன்ற கூட்டத் தொடர்

இந்த தொடரில் ஆன்லைன் ரம்மி மசோதா, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கை, ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பார்வைக்கு வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் என தெரிய வந்திருக்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடி அறிக்கை ஆகியவை எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆறுமுக சாமி ஆணைய விவகாரம் ஓபிஎஸ் தரப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக இருக்கும் என்று தகவல்கள் உலாவுகின்றன. இந்த தொடரில் ஆன்லைன் ரம்மி மசோதா, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கை, ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பார்வைக்கு வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் என தெரிய வந்திருக்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடி அறிக்கை ஆகியவை எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆறுமுக சாமி ஆணைய விவகாரம் ஓபிஎஸ் தரப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக இருக்கும் எனவே தகவல்கள் உலாவுகின்றன.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்

எதிர்க்கட்சி துணைத் தலைவர்

ஏற்கனவே அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது சட்டப்பேரவை கூட இருக்கிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமரப்போவது யார் என்ற விவகாரமும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே தான் தான் பொருளாளர் என ஓ.பன்னீர்செல்வமும், தான் தான் இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமியும் கூறிவரும் நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் இரு தரப்பினருக்குமே நெருக்கடி அளிக்கும் வகையில் இருக்கும் என்கின்றனர் மூத்த ரத்தத்தின் ரத்தங்கள்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்

அதே நேரத்தில் ஏற்கனவே கூறியது போல மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஏற்கனவே அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தலைமை செயலாளர் ராம மோகன ராவ், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனால் சி விஜயபாஸ்கர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி சமாளிப்பது

எப்படி சமாளிப்பது

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட தூது துப்பாக்கிச் சூடு ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்த விசாரணை அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி திரும்பிய இடமெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நடவடிக்கைகள் சட்டமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனை எப்படி சமாளிப்பது என்ற நீதியில் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் இருப்பதாகவும் திமுகவின் இதுபோன்ற நெருக்கடிகளை சமாளிக்க மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை சட்டமன்றத்தில் எழுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட தூது துப்பாக்கி ச் சூடு ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்த விசாரணை அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி திரும்பிய இடமெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நடவடிக்கைகள் சட்டமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது இதனை எப்படி சமாளிப்பது என்ற நீதியில் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் இருப்பதாகவும் திமுகவின் இதுபோன்ற நெருக்கடிகளை சமாளிக்க மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை சட்டமன்றத்தில் எழுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது.

English summary
The Tamil Nadu Legislative Assembly session is scheduled to start on October 17, although the session will be held for a very short period of time, but some important issues against Edappadi Palaniswami will be presented in it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X