சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 தொகுதி இடைத்தேர்தல் ரத்து.. உள்நோக்கம் நிறைந்தது.. ஜனநாயகத்திற்கு புறம்பானது.. திமுக தீர்மானம்

Google Oneindia Tamil News

Recommended Video

    இடைத்தேர்தல் ரத்து உள்நோக்கம் நிறைந்தது - திமுக தீர்மானம்- வீடியோ

    சென்னை: 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை ரத்து செய்வது உள்நோக்கம் நிறைந்தது என திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (11-3-2019) காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் , சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும்.

    17ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலும், காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் (10.3.2019)அறிவித்திருப்பதை மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வரவேற்கிறது.

    3 தொகுதி இடைத்தேர்தல் நடத்த ஆணையம் மறுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம்- ஸ்டாலின் வார்னிங் 3 தொகுதி இடைத்தேர்தல் நடத்த ஆணையம் மறுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம்- ஸ்டாலின் வார்னிங்

    உள்நோக்கம்

    உள்நோக்கம்

    ஆனால் தமிழ்நாட்டில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை மட்டும் தள்ளி வைத்திருப்பது மிகுந்த உள்நோக்கம் நிறைந்த ஜனநாயகத்திற்குப் புறம்பான நடவடிக்கை என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வேதனையுடன் தனது கருத்தைப் பதிவு செய்கிறது.

    கூட்டம்

    கூட்டம்

    "வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மூன்று தொகுதி இடைத் தேர்தல்களை நடத்தவில்லை" என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பதற்கு எவ்வித முகாந்திரமோ, ஆதாரமோ, அடிப்படையோ இல்லை என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கருதுகிறது.

    இறுதி

    இறுதி

    குறிப்பாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு - அந்த தகுதி நீக்கம் ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இறுதிக்கு வந்துவிட்டது.

    உத்தரவு ஏதும் இல்லை

    உத்தரவு ஏதும் இல்லை

    அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வேறு தேர்தல் வழக்குகளில் "தேர்தலை நடத்தக் கூடாது என்று எவ்வித தடையுத்தரவும் தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்கப்படவில்லை" என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் வழக்கிலும் அவ்வாறு தடையுத்தரவு ஏதும் இல்லை.

    திமுக வலியுறுத்தல்

    திமுக வலியுறுத்தல்

    ஆகவே அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

    விருப்பம்

    விருப்பம்

    இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.கழகம் நேரில் வலியுறுத்தும். அதற்கேற்றவாறு தேர்தல் நடத்த முன் வராவிட்டால், நீதிமன்றம் மூலம் இந்த மூன்று தொகுதிகளின் தேர்தலையும் நடத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இக்கூட்டம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    English summary
    DMK passes resolution on 3 assembly constituencies by election which was cancelled by EC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X