த்ரிஷா விஜய், சங்கீதா விஜய் உண்மையில் இருக்காங்களா? புக் ஆர்டர் போட்ட அதிகாரிகள் யார்? திமுக கேள்வி!
சென்னை: சமீபத்தில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த கோவை பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் வாங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தவெகவும் திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், கோவை 'பெரியார் அறிவுலகத்தில்' புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகாரில் 8 கேள்விகள் கேட்டு அது தோடர்பாக விசாரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் கோவையில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். சுமார் 300 கோடியில் இந்த அறிவுலகம் அமைக்கப்பட்ட போது பல தரப்பினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏழு தளங்கள் கொண்ட இந்த அறிவுலகத்தில் சுமார் 50 கோடி ரூபாய்க்கு புத்தகங்களும், 5 கோடி ரூபாய்க்கு இ புத்தகங்களும் வாங்கப்பட்டது. இதனால் பல தரப்பினரும் இதனை கொண்டாடி மகிழ்ந்த நிலையில் ஒரு பகீர் புகாரினை திடீரென முன் வைத்தார் எழுத்தாளரான பெருமாள் முருகன்.
பெரியார் அறிவுலகம்
அதாவது பெரியார் அறிவுலகத்துக்கு போலி எழுத்தாளர்கள் போலி பதிப்பகங்கள் பெயர்களில் ஏராளமான புத்தகங்கள் வாங்கப்பட்டு, அதுவும் அதிகமான விலைக்கு வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது. அது மட்டுமல்லாமல் இந்த அறிவு உலகத்துக்கு புத்தகம் அளிப்பதற்காகவே போலி பதிப்பகங்கள் தொடங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
திமுக
அது மட்டுமில்லாமல் அங்கிருந்த புத்தகங்களில் மிகப்பெரும் வரலாற்றுப் பிழை இருப்பதாகவும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை வைத்து புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டினார். இதை அடுத்து இந்த விவகாரம் பெரிதான நிலையில் திமுகவினரும் தமிழக வெற்றிக் கழகத்தினரும் மாறி மாறி புகார் சொல்லி வருகின்றார்.
ரந்தாமன்
இந்நிலையில், கோவை 'பெரியார் அறிவுலகத்தில்' புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும், கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
8 கேள்விகள்
அதில் இந்த ஊழல் தொடர்பாக பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்?
2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா?
3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?
4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?
5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?
6. த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?
7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?
8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?" எனவும் கேட்டுள்ளது திமுக.


Click it and Unblock the Notifications
