விஜய் எதிர்ப்பு.. நாதக வாக்காளர்களை நகர்த்தும் ஸ்டாலின்.. ரவீந்திரன் துரைசாமி சொன்ன பாய்ண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாதக வாக்காளர்களை விஜய்க்கு எதிராக நிறுத்த திமுக காய் நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். சீமானை பொது வேட்பாளராக திமுக ஆதரிக்குமா என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதில் அளிக்காததன் நோக்கம் இதுதான் என்றும், கடைசி நேரத்தில் அம்பையில் மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திமுக களமிறக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்குகிறார். நாதகவினர் சீமானை பொது வேட்பாளராக்க வேண்டும் என்று முயற்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருவருமே, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும்.. பின்னர் பேசலாம் என்று பதில் அளித்து கடந்து சென்றனர்.

DMK

அதேபோல் திமுக, அதிமுக ஆதரவு அளித்தால், நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் என்று சீமான் கூறியுள்ளார். இதன் மூலமாக சீமானை கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சியில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் கூட்டணிக்குள் வராமல் இரு கட்சிகளும் சீமானை ஆதரிப்பது நடக்காத விஷயம் என்றும் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேசுகையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் 1989 முதலே நாடார், மறவர் இடையிலான வாக்கு வங்கி போட்டி இருந்து வருகிறது. இதன் காரணமாக சீமான் பொது வேட்பாளர் என்று தன்னை முன்னிறுத்துகிறார். சீமானின் பொது வேட்பாளர் என்ற பேச்சை ஸ்டாலின் சிறப்பாக பயன்படுத்துகிறார்.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும் என்று ஸ்டாலின் சொல்வதன் மூலமாக நாதக வாக்காளர்களை விஜய் எதிர்ப்பு புள்ளிக்கு நகர்த்துகிறார். ஸ்டாலினின் பேச்சு சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்ற தோற்றத்தை கொடுக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் மறவர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை உதயசூரியனில் ஸ்டாலின் நிறுத்துவார் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார்.

சீமான் கடந்த சில மாதங்களாகவே தவெகவை எதிர்க்கும் அளவிற்கு திமுக, அதிமுகவை விமர்சிப்பதில்லை. அதேபோல் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆதரவை கோரும் சீமான், அவர்களுக்கு எதிராக இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டேன் என்பதை கூட அறிவிக்கவில்லை. இதனால் இடைத்தேர்தல் தேதி அறிவித்த பின், நாதகவின் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+