சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவில் வரும் அதிரடி.. சட்ட விதிகளில் மாற்றம்.. காத்திருக்கும் சரவெடி.. "மாஸ்டர் பிளான்!"

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைமைப் பதவிகளில் ஜாதிகளுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கட்சி சட்ட விதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்படக் கூடும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

சென்னையில் அக்டோபர் 9-ந்தேதி நடக்கும் திமுகவின் பொதுக்குழுவில் தலைவர், பொதுச் செயலாளர்,பொருளாளர், தனிக்கை குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு ஒப்புதல் பெறப்படவிருக்கிறது. இந்த பொதுக் குழுவில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டிரு ப்பதாக திமுக தரப்பிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

நீதிமன்றம் இருக்கட்டும்.. இப்ப 'பந்து’ அப்பாவு கோர்ட்டில்.. திமுக பிளான் என்ன? நெருங்கும் ரிசல்ட்! நீதிமன்றம் இருக்கட்டும்.. இப்ப 'பந்து’ அப்பாவு கோர்ட்டில்.. திமுக பிளான் என்ன? நெருங்கும் ரிசல்ட்!

 திமுக சட்டவிதிகள்

திமுக சட்டவிதிகள்

திமுகவின் சட்டவிதி களின் படி தற்போது 5 துணைப் பொதுச்செயலாளர்கள் இருக்கிறார்கள். அந்த 5 பேரில் மகளிருக்கு ஒரு பிரதிநிதித்துவமும், தலித் சமூகத்தினருக்கு ஒரு பிரதிநிதித் துவமும் இருக்க வேண்டும். அதன்படி, மகளிர் பிரதிநிதித்துவத் தில் சுப்புலட்சுமி ஜெகதீசனும் தலித் பிரதிநிதித்துவத்தில் அந்தியூர் செல்வராஜும் இருந்தனர். தனது பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதால் அந்த இடம் காலியாக இருக்கிறது.

சுப்புலட்சுமி ராஜினாமா எதிர்வினை

சுப்புலட்சுமி ராஜினாமா எதிர்வினை

சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்தில் கொங்கு வேளாளர் சமூகத்தினர் ஒருவருக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் சுப்புலட்சுமியின் நியமனம் என்பது மகளிர் பிரதிநிதித்துவம் அடிப்படையில் அமைந்ததே தவிர, சமூக ரீதியாக நியமிக்கப்படவில்லை. அதனால் சமூக கோரிக்கையாக கோரக்கூடாது என தலைமையில் இருந்து பதில் தரப்பட்டுவிட்டது. சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்துக்கு மற்றொரு மகளிரைத்தான் நியமிக்க வேண்டும். அந்த இடத்துக்கு கனிமொழி கருணாநிதி, கனிமொழி என்.வி.என். சோமு, கீதாஜீவன் உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

தலைமைக்கு பரிந்துரை

தலைமைக்கு பரிந்துரை

இப்படிப்பட்ட சூழலில், கட்சியின் மாநில பொறுப்புகளில் கொங்கு வேளாளர் சமூகத்துக்கு பிரதிநிதித் துவம் இல்லாமல் இருக்கிறது என்று ஒரு விவாதம் கட்சியில் மேலிடத்தில் நடந்துள்ளது. ஆகையால் துணைப் பொதுச்செயலாளர் நியமனத்தில் கொங்கு வேளாளர் சமூகத்துக்கு வாய்ப்பளிக்கலாம் என ஸ்டாலினிடம் ஒரு ரிப்போர்ட் தரப்பட்டது. தற்போதைய நிலையில் துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா ஆகியோரை மாற்ற இயலாது என்பதால் புதிய யோசனை தலைமையிடம் முன்வைக்கப்பட்டதாம்.

து.பொ.செ. பதவி எண்ணிக்கை அதிகரிப்பு

து.பொ.செ. பதவி எண்ணிக்கை அதிகரிப்பு

அதாவது திமுக துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தால் ஜாதிய பிரதிநிதித்துவ சிக்கலுக்கு தீர்வு காணலாம் என்பதுதான் அது. கொங்கு வேளாளர் மற்றும் நாயுடு சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்காக துணைப் பொதுச்செயலாளர் களின் எண்ணிக்கையை 5-லிருந்து 7 ஆக மாற்றி கட்சி விதிகளில் திருத்தம் செய்யுங்கள். வன்னியர் சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் எனில் துணை அமைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதில் நியமித்து விடுங்கள் என்றும் ஆலோசனை கொடுக்கப்பட்டி ருக்கிறது.

English summary
According to the Sources DMK may increase Deputy General Secretaries Post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X