சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சொல்லுங்க மாமா".. நீ ஏம்ப்பா இங்க வந்த.. முறைத்த "தலைவர்"... விழுந்து விழுந்து சிரித்த உதயநிதி!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக வேட்பாளர் நேர்காணலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டது பெரிய அளவில் வைரலாகி வந்தது.. இந்த நிலையில் வேட்பாளர் நேர்காணலில் என்ன நடந்தது என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் மௌனம் கலைத்து இருக்கிறார்.

Recommended Video

    எவ்வளோ கொடுப்பீங்க.. வேட்பாளர் நேர்காணலில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

    உதயநிதி ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புகிறார் என்று நிறைய செய்திகள் கடந்த இரண்டு வாரமாக உலவி வருகிறது. ஆனால் உதயநிதியின் வருகையை ஸ்டாலின் விரும்பவில்லை, பிரஷாந்த் கிஷோரும் விரும்பவில்லை என்று நிறைய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது.

    உதயநிதிக்கு போட்டியிட ஆசைதான்.. ஆனால் ஸ்டாலின் ஏற்கவில்லை என்றெல்லாம் நிறைய செய்திகள் வெளியானது. இன்னும் ஒருபடி மேலே போய் உதயநிதி கட்சி விருப்பத்தை மீறிதான் நேர்காணலில் கலந்து கொண்டார் என்றெல்லாம் கூட இணையத்தில் சிலர் செய்தி வெளியிட்டு இருந்தனர்.

    ஆனால்

    ஆனால்

    ஆனால் நேர்காணலில் நடந்த விஷயமே வேறு என்று உதயநிதி கூறியுள்ளார். நேர்காணலில் இப்படி எதுவும் நடக்கவில்லை. அன்று நடந்த விஷயம் உண்மையில் வேறானது என்று உதயநிதி கூறியுள்ளார். உதயநிதி சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட விரும்பி உள்ளார். இவர்தான் பெரும்பாலும் சேப்பாக்கத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    உதயநிதி

    உதயநிதி

    இது தொடர்பாக உதயநிதி அளித்த பேட்டி ஒன்றில், வேட்பாளர் நேர்காணலில் என்ன நடந்தது என்று நானே சொல்கிறேன்.. ஒவ்வொரு பத்திரிகையிலும் உள்ளே இருந்து பார்த்த மாதிரியே எழுதுறான். ஆனா எதுவுமே உண்மை கிடையாது. உள்ளே என்ன நடந்தது என்று நானே சொல்லிவிடுகிறேன்.. இதை எல்லாம் சொல்லலாமா என்று தெரியவில்லை. ஆனாலும் சொல்கிறேன். முதலில் நான் வரமாட்டேன் என்றுதான் நினைத்தார்கள்.

    சேப்பாக்கம்

    சேப்பாக்கம்

    ஆனால் சேப்பாக்கத்தில் போட்டியிட யாரும் விரும்பவில்லை. இதனால் நானே போய் உள்ளே நேர்காணலில் கலந்து கொண்டேன். தலைவர் அப்படியே என்னை பார்த்தார். பொருளாளர் டிஆர் பாலு என்னை பார்த்தார். அவரை நான் மாமா என்றுதான் அழைப்பேன்.. சொல்லுங்க மாமா என்றேன்.. அவர் என்னிடம் நீ எதுக்கு இன்டர்வியூ வந்து இருக்க.. போய் நேரா சேப்பாக்கம் தொகுதி வேலையை பாரு என்று கூறினார். இன்னொரு பக்கம் ஆ.ராசா.. நீ எவ்வளவு செலவு செய்வ என்று கேட்டார்.

    அப்பா கொடுப்பார்

    அப்பா கொடுப்பார்

    நான் உடனே .. எங்க அப்பா அவ்வளவு கொடுப்பங்களோ அதை செய்வேன். வேறு எதையும் வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போக மாட்டேன் என்றேன். தலைவர் என்னை முறைத்தார். அடுத்து பொதுச்செயலாளர் என்னிடம் பேசினார்.. நான் பொதுச்செயலாளர். எனக்குத்தான் இங்கு அதிக உரிமை இருக்கிறது.

    234 தொகுதி

    234 தொகுதி

    தலைவர் என்ன சொன்னாலும் சரி.. நீதான் சேப்பாக்கம் வேட்பாளர் என்று கூறினார். ஆனால் நான் தலைவரின் சொல்லுக்காக காத்திருந்தேன். இதை தொடர் தலைவரும் என்னை போ போ.. போய் 234 தொகுதியிலும் சுற்றிவிட்டு வா என்று கூறினார். இதையடுத்து நான்..என்னை நிற்க வைத்தாலும் சரி..யாரை நிற்க வைத்தாலும் சரி.. நான் திமுகவிற்காக உழைப்பேன்.

    ஆசை

    ஆசை

    திமுகவிற்காக யார் அங்கு போட்டியிட்டாலும் நான் வாக்கு கேட்பேன் . எனக்கு எம்எல்ஏ ஆக வேண்டுமென்று ஆசை எல்லாம் இல்லை. ஆனால் சேப்பாக்கத்தில் போட்டியிட ஆசை.. எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. திமுகவின் வெற்றிக்காக உழைப்பது மட்டுமே இப்போது என்னுடைய ஒரே குறிக்கோள் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    DMK Udhayanidhi Stalin opens up about his interview for Chepauk Candidacy for the upcoming Tamilnadu Assembly Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X