சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு.. தேதி குறித்த தலைமை! 16 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுகிறது..!
சென்னை: திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞரணியின் முதல் மாநாடு 2007ல் நடைபெற்ற நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2007ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி அன்று கழக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வருகிற 17.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 'திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு' சேலத்தில் நடைபெறும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் வரும் டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி (17-12-2023, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இப்படி ஒரு பெருமைமிகு வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ள இந்த மாநாட்டை, இந்திய அரசியலில் திருப்புமுனை மாநாடாகவும், தமிழ்நாட்டு வரலாற்றில் தடம் பதிக்கக்கூடிய மாநாடாகவும் மாற்ற இன்றிலிருந்தே உழைக்க உறுதியேற்போம்." எனத் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரம்மாண்டமாக புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
தி.மு.க இளைஞர் அணியின் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 13 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அப்போதே டிசம்பர் மாதம் 2வது மாநில மாநாடு நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அத்துடன் 2வது மாநில மாநாட்டிற்காக இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஒன்றிணைந்து ரூ. 51 லட்சத்திற்கான காசோலையையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அப்போதே வழங்கினர். இந்நிலையில், தற்போது மாநாடு நடைபெறும் தேதி மற்றும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறவுள்ளது.
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications