சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த மனசுதான் கடவுள்.. 24 மணி நேரமும் லெஜண்ட் சரவணன் அருள் வீட்டில் அன்னதானம்.. குவியும் பாராட்டு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள் தனது வீட்டில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணா நாடார். இவருக்கு மூன்று மகன்கள். அவர்கள் செல்வரத்தினம் யோக ரத்தினம், ராஜரத்தினம். இவர்களில் இளைய மகனான செல்வரத்தினம்தான் சென்னையில் வியாபாரத்தில் தனது வெற்றி கொடியை நாட்டினார்.

தனது வியாபாரத்தில் நல்ல நிலையை அடைந்தவுடன் செல்வரத்தினம் தனது சகோதரர்களின் குடும்பத்தையும் சென்னைக்கு அழைத்து வந்து அவர்களும் வியாபாரம் செய்ய உதவினார். இதையடுத்து செல்வரத்தினம் இறந்தவுடன் அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வந்து கடைகளும் பிரிந்தன. செல்வரத்தினத்தின் மகன்தான் சரவணன் அருள்.

உண்மையிலேயே 'லெஜண்ட்’ தான்! அண்ணாச்சி அருள் சத்தமின்றி செய்த 3 சாதனைகள்! சூப்பர் ஸ்டார் கூட பண்ணலை! உண்மையிலேயே 'லெஜண்ட்’ தான்! அண்ணாச்சி அருள் சத்தமின்றி செய்த 3 சாதனைகள்! சூப்பர் ஸ்டார் கூட பண்ணலை!

 கடையை விஸ்தரித்து

கடையை விஸ்தரித்து

இவர் நாளடைவில் தனது கடையை விஸ்தரித்து முன்னணி நகரங்களில் கிளைகளை அமைத்து பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறார். இவர் அவருடைய கடையின் விளம்பர படத்தில் நடிகைகள் ஹன்சிகாவுடனும் நடிகை தமன்னாவுடனும் அவரே நடித்து பிரபலமானார். இந்த நிலையில் தி லெஜண்ட் என்ற ஒரு படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

 2500 தியேட்டர்கள்

2500 தியேட்டர்கள்

இந்த படம் 2500 தியேட்டர்களில் வெளியான போதிலும் எதிர்பார்த்த வெற்றியை குவிக்கவில்லை. தற்போது அடுத்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் அண்ணாச்சி இயக்குநர்களை தேடி வருகிறாராம். டிவிட்டர் பக்கத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் தி லெஜண்ட் சரவணன் அருள் தற்போது ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அன்னதானம்

அன்னதானம்

அதில் தன் வீட்டில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது போல் என் மீது அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு என்னென்றும் திறந்திருக்கும் என்றும் கூறி பொதுமக்கள் அவர் வீட்டில் இருக்கும் புகைப்படங்களையும் அண்ணாச்சி வெளியிட்டுள்ளார்.

பாராட்டுகள்

பாராட்டுகள்

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அண்ணாச்சியை வாழ்த்தி வருகிறார்கள். இதுவரை எந்த பெரிய நடிகராவது இது போல் ஏழைகளுக்கு வயிறார சாப்பாடு போட்டிருக்கிறார்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அது போல் இந்த அன்னதான சேவையை தொடருங்கள் என வாழ்த்தியுள்ளார்கள். இன்னும் சில பேர் அண்ணாச்சி இது உங்கள் வீடா, நான் புது கடையோனு நெனச்சேன் என சொல்லி கலாய்த்தும் உள்ளார்கள்.

English summary
Legend Saravanan gives place for public in his home and he is giving 24 hours annnadhanam in his home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X