Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஞ்சு மிட்டாய் "பஞ்சு பஞ்சா" போச்சே.. இனிப்பு விஷம்.. தமிழக மனசை கரைத்து.. வீ மிஸ் யூ பஞ்சுமிட்டாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாயில் வைத்ததுமே, பஞ்சு பஞ்சாய் கரைந்து தேனாய் உருகும், இந்த பஞ்சு மிட்டாய்கள், ஒரு காலத்தில் மிகவும் காஸ்ட்லியான தின்பண்டங்களாக திகழ்ந்தன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

முதன்முதலில், இத்தாலியிலிருந்து கடந்த 15-ம் நூற்றாண்டில் இந்த பஞ்சு மிட்டாய் உருவானதாக சொல்கிறார்கள்.. அப்போதெல்லாம் பஞ்சு மிட்டாய் செய்வதற்கான இயந்திரங்கள் கிடையாது, சுவையூட்டும் கலவையூட்டுகள் கிடையாது.

Do you know what are the Specialities of Cotton candy and Are these the impacts of cotton candy in Tamil Nadu

பஞ்சு மிட்டாய்: அதனால், மிகவும் கஷ்டப்பட்டுதான் இந்த பஞ்சு மிட்டாயை தயாரித்திருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, பணக்காரர்கள் மட்டுமே வாங்கி சாப்பிடும் இனிப்பாக இந்த பஞ்சு மிட்டாய் இருந்துள்ளது.

அதற்கு பிறகுதான்., பஞ்சு மிட்டாய் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு, பஞ்சு மிட்டாய்களின் தயாரிப்புகள் எளிமையாயின.. 1904ம் ஆண்டு, உலக அளவில் ஒரு கண்காட்சி நடந்ததாம். அந்த கண்காட்சி மூலம்தான் உலகம் முழுக்க பஞ்சு மிட்டாய்கள் பிரபலமாக துவங்கியிருக்கின்றன. இதற்கு காரணம், அதே கண்காட்சியில், மொத்தம் 70 ஆயிரம் பெட்டி பஞ்சு மிட்டாய்கள் விற்பனையானதாம்.

தித்திப்பு சுவை: இந்த பஞ்சு மிட்டாய் இந்த அளவுக்கு உலக ஃபேமஸ் ஆனதுக்கு காரணமே, அதன் தித்திப்பு சுவைதான்.. அதாவது, சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சு மிட்டாய் மிஷினில் கொட்டுவார்கள்.. உள்ளிருக்கும் வெப்பம் + வேகமான சுழற்சியினால், சர்க்கரை உருக துவங்கும்.. உருகும் சர்க்கரையானது, நுண்ணிய இழைகளாக உருமாற துவங்கும்.. காற்றுடன் சேர்த்து அவை வெளியேறும்போது, கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், நாவிற்கு ருசியாகவும் நம்முடைய கைக்கு வந்து சேர்கிறது.

வெறும் சர்க்கரையால் தயாரானது என்றாலும், அந்த மிட்டாயின் கலரும், மெல்லிய குச்சியை புஸ்ஸென மூடியிருக்கும் அந்த வடிவமும்தான் கவர்ச்சியை மேலும் அதிகமாக்குகிறது.

சிறப்புகள் :
காலம் மாறினாலும், நவீனம் கூடினாலும், தொழில்நுட்பம் பெருகினாலும், விதவித இனிப்புகள் வெளிவந்தாலும், காலம்காலமாக இந்த பஞ்சுமிட்டாய்களின் இனிப்பு மட்டும் திகட்டுவதேயில்லை.

அதனால்தானோ என்னவோ, டிசம்பர் 7-ம் தேதியை பஞ்சு மிட்டாய் தினமாகவே (Cotton Candy Day) வெளிநாடுகளில் கொண்டாடுகிறார்கள். ஆனால், நம்முடைய தமிழகத்துக்கும், இந்த பஞ்சுமிட்டாய்க்கும் ஏதோ ஒரு நெருக்கமான பிணைப்பு இணைந்து பயணித்து வருகிறது.

பஞ்சு மிட்டாய்கள்: இந்த பஞ்சு மிட்டாய் விஷயத்தில் மட்டும், யாரும் வயது வித்தியாசம் பார்ப்பதில்லை.. இந்த பஞ்சு மிட்டாயை பார்த்ததுமே பெரியவர்களுக்கும் ஒருவித மழலைத்தன்மை மனதுக்குள் ஒட்டிக் கொள்ளும்.

பெண்களுக்கான நிறம் என்று பிங்க் என்று பரவலாக சொல்வார்கள்.. குழந்தைகளை கவரக்கூடிய பிளாஸ்டிக், ரப்பர் பொம்மைகள் என்றாலும்கூட, பெரும்பாலும் பிங்க் நிறத்தில்தான் விற்பனையாகின்றன. அவ்வளவு ஏன்? கார்டூன்களில்கூட, பிங்க் நிற ஆடைகளே பெருமளவு உபயோகிக்கப்படுகிறது. அப்படியானால், மனதுக்கு மிகவும் பிடித்தமான நிறமாக, மகிழ்ச்சியூட்டும் நிறமாக இந்த பஞ்சு மிட்டாய் கலர், அழுத்தமாக பதிவு செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது.

நிறங்கள்:
இப்போதுவரை திருவிழா என்றாலும் சரி, கல்யாண வீடுகள் என்றாலும் சரி, பூங்காக்கள், நடைபாதைகள் என்றாலும் சரி, எல்லா இடங்களிலுமே இந்த பஞ்சுமிட்டாய்கள் சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுகின்றன. எல்லா வகையான நிறங்களுக்குமே உள்ள மகத்துவம் இந்த பஞ்சு மிட்டாய்க்கும் உள்ளதால்தான், "பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற பாடல் வரை சினிமாவிலும் தாக்கத்தை உண்டு பண்ண முடிந்திருக்கிறது.

இந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த பஞ்சுமிட்டாய் விஷம் என்ற தகவல் வந்துள்ளதும், தமிழக அரசு இதற்கு தடை விதித்துள்ளதும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்து வருகிறது. நம்முடைய நலனை கருதி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது..

எளிய மக்கள்: அதேசமயம், அன்று மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே சாப்பிடக்கூடியதாக விளங்கிய இந்த பஞ்சுமிட்டாய், இன்று நாடுகளை கடந்து, தேசங்களை கடந்து, நம்முடைய தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள வெகுஜன மக்கள் வரை ஒன்றுகலந்துவிட்டதை மறுக்க முடியாது. முதியோரையும் மழலையாக்கிய சக்தி, ரோஸ்கலர் மிட்டாய்க்கு நிறையவே இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

நம்முடனேயே எல்லா காலமும் பயணித்து, நம்முடனேயே நெருக்கமாக பயணப்பட்டு வந்த பஞ்சுமிட்டாயை நாம் மறந்துதான் ஆகணும்.. வேற வழியில்லை.. அளவுக்கு மிஞ்சினால் "பஞ்சுமிட்டாயும்" நஞ்சுதான்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+