ஒரு மாதமாக விலை அதிகரிக்கவில்லை.. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58-க்கும், டீசல் விலை ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதமாக அதிகரிக்கவில்லை. 5 மாநில தேர்தல் நடப்பதால் விலை அதிகரிக்கவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் உலா வருகின்றன.

தொடர்ந்து அதிகரித்த விலை
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 2017 முதல் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்ததால் வாகன ஓட்டிகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு மாதமாக விலை உயரவில்லை
கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை அதன்பின்னர் இன்று வரை ஒரு மாதத்திற்கும் மேலாக அதிகரிக்கவில்லை. அதற்கு மாறாக 2 முறை விலை குறைக்கப்ட்டது. மேலும் சமையல் சிலிண்டர் விலையும் ரூ.10 குறைக்கபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேர்தல்தான் காரணமா?
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவை ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடப்பதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் உலா வந்தன. விலை குறைப்புக்கு இதுதான் காரணம் என்றும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கு விற்பனை செய்யப்பட்டது.. டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று விலையில் மாற்றமில்லை
இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58-க்கும், டீசல் விலை ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! ஒரே நாளில் தீர்வு.. சென்னைக்கு குஷி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications