ஆழ்ந்த காற்றழுத்தம் எங்கே இருக்கிறது? எப்போது கரையை கடக்கும்? மீண்டும் காற்றழுத்தமாகிறதா?
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் தற்போது எங்கே இருக்கிறது என்பது குறித்து தெரியுமா?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் கடந்த 9 ஆம் தேதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்தமாக தீவிரமடைந்தது.
இது புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

அதிக மழை
அது போல் தலைநகர் சென்னையிலும் அதிக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சனிக்கிழமையான இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுவை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

எங்கெங்கு மழை
அது போல் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். நாளை மிதமானது முதல் லேசான மழை பெய்யும். மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

ஆழ்ந்த காற்றழுத்தம் எங்கே
பரவலான மழை வரும் 15 ஆம் தேதி வரை தொடரும். தமிழகம்- புதுவை அருகே நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தமானது இன்று வங்கக் கடலில் இருந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தமிழக உள்மாவட்டங்கள் வழியாக அரபிக் கடலை சென்றடையும். பின்னர் அது அரபிக் கடலின் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதிகளில் குறைந்த காற்றழுத்தமாகவோ அல்லது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாகவோ நாளை உருவாகும்.

அரபிக் கடல்
இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் அரபிக் கடலில் கலந்தாலும் வளிமண்டலத்தில் ஈரப்பதம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்யும். சென்னையில் இன்றைய தினம் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். தலைநகரில் அதிகபட்ச வெப்பமானது 29 டிகிரியாகும், குறைந்தபட்ச வெப்பநிலையானது 23- 24 டிகிரியாகவும் இருக்கும்.
-
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications