சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாண்டஸ் புயல் எங்கே? கரையை கடக்கும் இடம் எங்கே? கடற்கரைகளின் நிலை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: மாண்டஸ் புயல் எங்கே இருக்கிறது , எப்போது கரையை கடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி என்ன இது ஒரு புயல் கூட வரைவில்லையே என்ற கவலை இருந்தது. வந்த காற்றழுத்தமும் ஆட்டம் காட்டி புஸ்வானம் ஆனது.

இந்த நிலையில்தான் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்தம் உருவானது. இந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது. பின்னர் நேற்று அதிகாலை புயலாக மாறியது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல்.. இன்று 3 தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. சென்னை உள்பட 8 இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் மாண்டஸ் புயல்.. இன்று 3 தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. சென்னை உள்பட 8 இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

மாண்டஸ் எங்கே

மாண்டஸ் எங்கே

இந்த பெயரை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்தது. இந்த புயல் சென்னையிலிருந்து 770 கி.மீ. தூரத்தில் இருந்தது. இது மணிக்கு 13 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்த நிலையில் தற்போது 270 கி.மீ. தூரத்தில் சென்னையின் வடகிழக்கே அமைந்துள்ளது. இது சூறாவளி புயலாக மாறுகிறது.

பேரிடர் மீட்பு

பேரிடர் மீட்பு

இந்த புயல் மழையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பல்வேறு மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். இந்த புயலின் வேகம் தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் உள்ளது. இது இன்று இரவு புதுவை- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாமல்லபுரம் கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது.

14 அடி உயரம்

14 அடி உயரம்

அலையின் உயரம் 14 அடி உயரத்திற்கு எழும்புகிறது என அப்பகுதியினர் தெரிவிக்கிறார்கள். மேலும் பட்டினம்பாக்கம், காசிமேடு, மெரினா, பெசன்ட் கடற்கரைகளில் அலையின் சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் இன்று முதல் நாளை வரை கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

6 மணிநேரத்தில் படிபடியாக வலுவிழக்கும்

6 மணிநேரத்தில் படிபடியாக வலுவிழக்கும்

6 மணி நேரத்திற்கு தீவிர புயலாக மாறும் மாண்டஸ் படிப்படியாக வலுவிழக்கும். காற்றின் வேகம் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று மதியம் சென்னையில் உள்ள ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

English summary
Do you know where is Mandous cyclone sitauted and landfall?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X