அந்த 4 ஏக்கர் நிலம்.. தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் ஆபிஸ் எங்கு வருது தெரியுமா? ஹைகோர்ட் அனுமதி
சென்னை: தாம்பரத்தில் தனியார் கல்வி நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தில் புதிய காவல் ஆணையர் அலுவலக கட்டிடம் கட்டுமான பணியை தொடங்கி, விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 1944 ஆம் ஆண்டு சென்னை தாம்பரத்தில் 9 ஏக்கர் 77 செண்ட் நிலத்தை பல்வேறு நிபந்தனைகளுடன் 'வள்ளுவர் குருகுலம்' என்ற கல்வி நிறுவனத்துக்கு அரசு ஒதுக்கியது.
இதில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் மீதமுள்ள 4 ஏக்கர் 77 செண்ட் நிலம் இது வரை பயன்படுத்தப்படாமலேயே இருந்து வருகிறது.

பயன்படுத்தப்படாமல் உள்ள நிலத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் கட்ட முடிவெடுத்த அரசு அந்த நிலத்தை மீட்டெடுத்தது.
இந்நிலையில், அரசு ஒதுக்கிய 9.77 ஏக்கர் நிலத்திற்கும் பட்டா வழங்க உத்தரவிடக்கோரி 'வள்ளுவர் குருகுலம்' கல்வி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்வி பயன்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய நிலத்தின் எதிரே தனியார் நிலத்தை வாங்கிய இந்த கல்வி நிறுவனம், அந்த இடத்தை நர்சிங் கல்லூரி, பெட்ரோல் பங்க், உணவகங்கள் உட்பட பல தனி நபர்களுக்கு வாடகை விட்டு பெரிய அளவில் வருமானம் ஈட்டு வருவதால், அரசு ஒதுக்கிய நிலத்துக்கு பட்டா வழங்க கூடாது என அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார்
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரசு விதித்த நிபந்தனைகளை கல்வி நிறுவனம் மீறியதுடன், நிலத்தை பயன்படுத்தப்படாமல் உள்ளதால் நிலத்துக்கு பட்டா வழங்கும்படி உத்தரவிட முடியாது என மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்துக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தில், ஆணையர் அலுவலக கட்டுமான பணிகளை துவங்கி விரைந்து முடிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் தற்போது எங்கு உள்ளது ? தற்போது தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்பட்டு வந்த தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பள்ளிக்கரணை, சேலையூர்,சிட்லப்பாக்கம், பீர்க்கன்கரணை, குன்றத்தூர், கானாத்தூர், சங்கர்நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி,கண்ணகி நகர் உள்ளிட்ட 13 காவல் நிலையங்களுடன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 காவல் நிலையங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்கள் ஆகியவை இணைக்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் இயங்கி வருகின்றன.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
கன்னியாகுமரியில் ஆசையாய் வீடு கட்டி குடியேறிய மக்களுக்கு ட்விஸ்ட்.. கடைசியில் பாதையே இல்லை -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications