"பச்சை பொய்".. அறிவே இல்லையா.. "அவரை" நிழல்கூட மதிக்காது.. பாஜக மீது பாய்ந்த திமுக மனுஷ்யபுத்திரன்
திமுகவின் மனுஷ்யபுத்திரன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளார்
சென்னை: பத்திரிகை சுதந்திரத்தின்மீது தாக்குதல் தொடுத்துகொண்டிருக்கிறது பாஜக.. அதனால், அண்ணாமலை போன்றோரின் போலி நாடகத்தை அவரது நிழல்கூட நம்பாது.. அரசியலுக்கும் அண்ணாமலைக்கும் கொஞ்சம்கூட தொடர்பு கிடையாது என்று, மூத்த பத்திரிகையாளர் மனுஷ்யபுத்தரன் கூறியுள்ளார்.
கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
மேலும், கோவையில் கார் வெடி விபத்தில் இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளதாகவும், இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை, தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லைம் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

மனுஷ்யபுத்திரன்
அதேபோல, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான விற்பனை தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட்டால் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளதற்கு, சாராய அமைச்சர் என்றும் கூறி விமர்சித்துள்ளார்.. இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக, திமுக ஐ.டி-விங் ஆலோசகரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் கருத்து தெரிவித்துள்ளார். நம் ஒன் இந்தியா தமிழுக்கு மனுஷ்யபுத்திரன் அளித்த ஸ்பெஷல் பேட்டியில் சொன்னதாவது:

காமெடி
"அண்ணாமலை போன்றோர் பத்திரிகையாளர்களுக்காக பேசுவதே காமெடியாகவும், கேவலமாகவும் இருக்கிறது.. ஏனென்றால், இதே பத்திரிகையாளர்களை பார்த்து அறிவாலயத்தில் 200 ரூபாய் வாங்கிக்கோ, 500 ரூபாய் வாங்கிக்கோ என்று சொன்னவர்தான் இந்த அண்ணாமலை.. நியாயமாக பார்த்தால், இப்படி சொன்னதுக்கே, அவரிடம் மைக் நீட்டுவதை பத்திரிகையாளர்கள் நிறுத்தியிருக்க வேண்டும்.. அந்த அளவுக்கு மீடியாக்காரர்களை விமர்சனம் செய்தவர்.. இவரை தலைவராக நியமித்த அந்த ஒன்றிய அரசு என்ன செய்கிறது என்று பார்த்தால், நாடு முழுவதும் பத்திரிகையாளர்களை கைது செய்கிறது, சிறை வைக்கிறது..

போலி நாடகம்
உபியில் ஒரு பாலியல் வழக்கை விசாரிக்க சென்ற சித்திக் என்பவரை ஒன்றரை வருஷம் ஜாமீன்கூட தராமல் ஜெயிலில் வைத்திருந்தார்கள்.. இப்படியல்லாம் பாசிச ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது.. பத்திரிகை சுதந்திரத்தின்மீது தாக்குதல் தொடுத்துகொண்டிருக்கிறது பாஜக.. அண்ணாமலை போன்றோரின் போலி நாடகத்தை அவரது நிழல்கூட நம்பாது.. கோவையில் அப்படி என்ன நடந்துவிட்டது? யாரோ ஒருவர் கொண்டு வந்த கியாஸ் சிலிண்டர் வெடித்துவிட்டது.. இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்கிறாரே.. எந்த அடிப்படையில், எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு, இப்படி அண்ணாமலை பேசுகிறார்..

அறிவு இருக்கா?
இது போலீஸ் விசாரணையை திசைதிருப்புகிற விஷயம்.. கியாஸ் சிலிண்டர் வெடிச்சதுகூட, தற்கொலை படைத்தாக்குதல் உலகத்தில் எங்காவது கியாஸ் சிலிண்டரை வைத்து, தற்கொலை படைத்தாக்குதல் நடந்திருக்கிறதா? குறைந்தபட்சம் அறிவு இருக்கிறவங்ககூட இப்படி ஒரு ஸ்டேட்மென்ட்டை சொல்லுவாங்களா? இதுகுறித்த விசாரணை முறைப்படி நடந்து கொண்டிருக்கிறது.. இன்னும் எந்த முடிவையும் அரசும் சொல்லவில்லை.. ஆனால், அதற்குள் இது என்னமோ பயங்கரவாத தாக்குதல் மாதிரியும், இதை என்னமோஅரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மாதிரியும் இவர் பேசிட்டு இருக்கார்.. இதுக்கும், இந்த டாஸ்மாக் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?

பொய் மீடியா
டாஸ்மாக் விஷயத்தை பொறுத்தவரை, அது அதிமுக ஆட்சியாக இருந்தாலும்சரி, தீபாவளிக்கு எவ்வளவு விற்பனையானது என்பதை அரசே அறிவிக்கும்.. இது வழக்கமாக உள்ள நடைமுறை.. ஆனால், இந்த முறை அரசாங்கத்திற்கு விற்பனை தொகை வரும்முன்பே, ஊடகத்திற்கு இந்த தகவலை பரப்பியது யார்? எங்கிருந்து பரப்பினார்கள்? தீபாவளிக்கு இவ்வளவு வசூலை செந்தில் பாலாஜி டார்கெட் செய்கிறார் என்று அந்த குறிப்பிட்ட ஊடகம், தீபாவளிக்கு முன்பே ஒரு ட்வீட் போட்டாங்க.. அதை கண்டிக்கவும், உடனே அந்த ட்வீட்டை டெலிட் செய்கிறார்கள்.. கள்ளக்குறிச்சி சம்பவத்தின்போது, போலீஸ் டிஜிபி சொன்னதாக பொய் தகவலை இதே ஊடகம்தான் வெளியிட்டது. அப்படி ஒரு தகவலை டிஜிபி சொல்லவே இல்லை..

பச்சை பொய்
இப்படி தொடர்ந்து பொய்த்தகவலை அந்த ஊடகம் பரப்பி கொண்டே இருந்தால், சம்பந்தப்பட்ட அமைச்சர் அதை கேட்க மாட்டாரா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் செய்திகளை பதிவிட்டீர்கள் என்று கேட்கிறார்.. ஆதாரம் தரவில்லையானால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் சொல்கிறார்.. இது அவருடைய உரிமை.. இது அவருடைய துறை சார்ந்த விஷயம்.. அமைச்சர் கருத்தில் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.. தீவிரவாதம் போன்ற விஷயங்களில் நாம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.. ஆனால், இங்கே வெடிகுண்டு ஏதாவது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? எந்த அடிப்படையில் ஓபிஎஸ் பேசுகிறார்? மக்களிடம் தேவையில்லாமல் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறார்கள்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications