3 புள்ளிகள்! தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகும் முகங்கள்! விஜயின் பக்கா மூவ்! யாரெல்லாம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு துவக்க விழா நடக்க உள்ளது. இந்த மாநாட்டிற்கு இடையே அக்கட்சியில் புதிதாக இணைய போகும் நபர்களின் பெயர்கள் அடிபட தொடங்கி உள்ளது.

அதன்படி த.வெ.க.வில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பிரபலங்கள் பலரும் தகவல் அனுப்பி வருகின்றனர். விருப்பம் தெரிவிப்பவர்களின் பட்டியல் நீண்டிருக்கிறது. இதில், ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், பாஜக ரஞ்சனா நாச்சியார், தினகரன் கட்சியின் செந்தமிழன், திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த பேச்சாளர்கள் என பலரும் இந்த பட்டியலில் இருக்கின்றனர்.

Edappadi Palaniswami aadhav arjuna

கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பவர்களின் பட்டியலை, நேற்று இரவு அலசிப் பார்த்துள்ளார் விஜய். கட்சியின் பொதுக்குழு ஆலோசனைக்குப் பிறகு பிரபலங்களை அழைத்துப் பேச திட்டமிட்டுள்ளாராம் விஜய். இது குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

மருது அழகுராஜ்

திமுக இழந்துவரும் மக்கள் ஆதரவையும் அதிமுக இழந்துவரும் தொண்டர்கள் அபிமானத்தையும் தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் மொத்தமாக அள்ளிக்கொண்டு போகப்போகிறது 2-ம் ஆண்டின் நீட்சியில், 2026-ம் ஆண்டு ஆட்சியில்... என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் போஸ்ட் செய்திருந்த நிலையில், அவர் விஜய் பக்கம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவை பிரிந்த நாச்சியார்

பாஜகவில் இருந்து இன்று விலகிய நாச்சியாரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக செய்திகள் பரவ தொடங்கி உள்ளன. பாஜகவில் இருந்து விலகிய நாச்சியார் செய்துள்ள போஸ்டில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய உங்கள் ரஞ்சனா நாச்சியாராகிய நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விடைபெறுகிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருத்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன்.

தேசப்பற்று மிகுந்த கட்சி, தேசியத்தை காக்கின்ற கட்சி, தேச பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் கட்சிப் பாணியாக செய்து கடமையாற்றி விடலாம் என கருதித்தான் இந்த கட்சியில் இணைந்தேன், இயங்கினேன், தேசியம் என்பதும், தெய்வீகம் என்பதும் நாடு முழுவதும் விரிவடைத்து நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காமல் ஒரு குறுகிய வட்டத்துக்கும் சுருங்கி போவதில் எனக்கு உடன்பாடு இல்லை தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன் ஆனால் தாயகம் வேறு தமிழகம் வேறு என்கிற மாற்றாந்தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா? என்கிற கேள்வியை எழுப்பியது என்று கூறி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

நாளை யாரும் இணைய வாய்ப்பு இல்லை

ஆனால் கட்சியின் பொதுக்குழு ஆலோசனைக்குப் பிறகு பிரபலங்களை அழைத்துப் பேச திட்டமிட்டுள்ளாராம் விஜய். இது குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இதனால் கட்சியில் புதிதாக இணையும் நபர்கள் விஜயின் வீட்டிற்கு சென்று சந்திப்பு நடத்த வாய்ப்புகள் உள்ளன.

மாறாக நாளை நடக்கும் கூட்டத்தில் இவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதன் பிறகு சில நாள் கழித்தே இவர்கள் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+