சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேஷன் கார்டில் உள்ள முகவரியை மாற்றணுமா.. ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஆன்லைனில் மாற்றலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: ரேஷன் கார்டில் உள்ள முகவரியை மாற்ற வேண்டுமானால் இனி ஆன்லைனிலேயே மாற்றலாம். உணவுத் துறை அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை.

ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு நபரின் முக்கிய ஆவணமாகும். இந்த அட்டையின் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, ரேஷன் பொருட்கள் கிடைக்கின்றன.

மேலும் அந்தந்த மாநிலத்திற்கேற்ப நிதியுதவிகள், பண்டிகை கால பரிசு பொருட்களும் கிடைக்கின்றன. மேலும் பல மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற முறையை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

ரேஷன் பொருட்கள்

ரேஷன் பொருட்கள்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு மூலம் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் விவசாயப் பொருட்களை பயன்படுத்தி மத்திய அரசு இந்த திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியது.

வெற்றிகரமான முயற்சி

வெற்றிகரமான முயற்சி

இந்திய அரசு எடுத்த வெற்றிகரமான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி அதை டிஜிட்டல் கட்டமைப்பின் முயற்சியாக தொடங்கினார். இந்த திட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் முக்கியமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டது.

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த ரேஷன் கடைகளையும் பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம். புலம் பெயர்ந்த பின்னர் ரேஷன் கார்டில் வழங்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட முகவரியை மாற்ற விரும்பினாலோ எப்படி மாற்றலாம் என்பதை பார்க்கலாம்.

முகப்பு பக்கம்

முகப்பு பக்கம்

www.pdsportal.nic.in என்ற லிங்கை கிளிக் செய்து இந்திய அரசின் அதிகாரப்பூர்வ PDS போர்ட்டலில் உள்ளே செல்ல வேண்டும். பின்னர் இதில் முகப்பு பக்கத்தில் மேல் இடது பக்கத்தில் உள்ள மாநில அரசு இணையதளங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

யூசர் ஐடி

யூசர் ஐடி

இதையடுத்து மாநில பட்டியலில் எந்த மாநிலமோ அதை தேர்வு செய்து கொள்ளவும் அப்போது மற்றொரு பக்கம் ஓபன் ஆகும். அதில் ரேஷன் கார்டு முகவரி மாற்ற படிவம் அல்லது ரேஷன் கார்டு படிவத்தில் மாற்றம் தொடர்பான பொருத்தமான லிங்கை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை போட்டு உள்ளே நுழைய வேண்டும்.

முகவரி

முகவரி

தேவையான விவரங்களை சரியாக நிரப்பி, பின்னர் சமர்ப்பிக்க வேண்டும். எதிர்கால தேவைக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் செய்து வைத்து கொள்ளலாம். மாநிலத்திற்கு மாநிலம் இந்த வழிமுறைகள் மாறுபாடும். எனவே முகவரி மாற்றம் குறித்து நன்றாக தெரிந்து கொண்டு மாற்றலாம்.

English summary
Do you want to change your address of Ration card from Online? Here are the steps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X