ரூ.1 இருக்கா? ஒரே ஒரு ரூபாய் கட்டணத்தில் 200 ரூம்கள்.. மூணாறு உங்களை அழைக்கிறது.. இதோ சூப்பர் சலுகை
சென்னை: கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள், மலைவாசஸ்தலங்களுக்கு படையெடுக்கிறார்கள்.. அந்தவகையில் மூணாறு பற்றின ஒரு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
குண்டலை, நல்ல தண்ணி, முத்தரப்புழை என்ற 3 ஆறுகள் சங்கமிக்கும் ஆறு என்பதால், அந்த ஊருக்கு மூணாறு என்று பெயர் வந்ததாம். மூணாறு என்றாலே, நம்முடைய கண்களை கொள்ளைகொள்வது அங்குள்ள தேயிலை தோட்டங்கள்தான். இதற்காகவே அனுமதிக்கப்பட்டுள்ள வாகனத்தில் மட்டும் தான் சுற்றுலா பயணிகள் சென்று வர வேண்டும்.

இரவிகுளம்: அதேபோல, இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு உள்ளே அமைந்துள்ளது ஆனைமுடி சிகரம். தென்னிந்தியாவிலேயே உயரமான சிகரம் இதுதான். கிட்டத்தட்ட 2700 மீட்டர் உயரம் கொண்டது. மலையேற்றத்திற்கு இது மிகச்சிறந்த இடமாகும். இங்கு அபூர்வமான விலங்குகள், பாம்புகள், பட்டாம்பூச்சி மற்றும் மூலிகை செடிகள் உள்ளன.
மூணாறு நகரத்திலிருந்து 13 கிமீ தூரத்தில் மாட்டுப்பெட்டி அணைக்கட்டு உள்ளது.. இங்கு படகு சவாரி செய்ய்யலாம். இதைத்தவிர, மாட்டுப்பட்டி கால்நடைப் பண்ணை, டாப் ஸ்டேஷன், தேயிலைக் கண்காட்சி, மரையூர் சந்தனக் காடுகள், குண்டலா ஏரி, அட்டுக்காடு நீர்வீழ்ச்சி, மலர் பூங்கா, சின்னாரு வனவிலங்கு சரணாலயம், லக்கோம் நீர்வீழ்ச்சி இப்படி ஏகப்பட்ட இடங்கள் மூணாறுவில் சுற்றுலா பயணிகளை கட்டிப்போட்டு விடுகின்றன.
தனுஷ்கோடி: மூணாறிலிருந்து இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெநடுஞ்சாலையில் 2வது மைல் வியூ பாயிண்ட் அமைந்துள்ளது. இந்த வியூ பாய்ண்ட் மூணாறின் சிறந்த சூரிய அஸ்தமன இடமாக விளங்குகிறது.

தற்போது கோடை காலம் துவங்கிவிட்டது.. வசந்த காலத்தின் வருகையை வரவேற்கும் வகையில் ஜக்ராந்தா மலர்கள் தற்போது பூத்துக் குலுங்க ஆரம்பித்துவிட்டன. பள்ளிவாசல் எஸ்டேட் பகுதி மற்றும் மூணாறு – மறையூர் சாலை பகுதி தேயிலை தோட்டத்திற்கு இடையே இயற்கையை ஊதா வண்ணங்களில் தீட்டியது போல ஜக்ராந்தா மலர்கள் பூத்துக் குலுங்குவது காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
அதிரடி அறிவிப்பு: இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்காக கோடையை முன்னிட்டு சிறப்பு சலுகையை சுற்றுலா வழிகாட்டி சங்கம் அறிவித்துள்ளது.. அந்தவகையில், மூணாறில் மார்ச் 27ல் தங்குவதற்கு முதலில் முன்பதிவு செய்வோருக்கு 200 அறைகள் தலா ரூ. 1 கட்டணத்தில் வழங்க போகிறார்களாம்..
அதாவது, மூணாறில் இரவு சுற்றுலா வழிகாட்டி சங்கத்தை ஊராட்சி தலைவர் தீபா தொடங்கி வைத்துள்ள நிலையில், இச்சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது..
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications