அமாவாசை: கா.. கா.. னு கத்தி தொண்டை தண்ணி வத்தி போச்சா.. போன் செய்யுங்க.. ரூ.50-க்கு வாடகை காக்கா...
சென்னை: நமது முன்னோர்களாக கருதப்படும் காக்கையை ரூ 50 வாடகைக்கு அனுப்பி மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு வைக்கப்படும் உணவை உட்கொள்ள வைக்கும் பிசினஸ் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதையெல்லாம் பிசினஸாக தொடங்கிவிட்டார்களா என்றால் ஆ என வாயை பிளப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
Recommended Video
அமாவாசை எனப்படுவது முன்னோர்களை வழிபடுவதாகும். இந்த நன்னாளில் முன்னோர்களை வழிபட்டால் நம் பாவங்கள் விலகி வாழ்வில் ஒளி பெருகும் என்பது ஐதீகம். மாதந்தோறும் வரும் அமாவாசைகளின் போது 3 தலைமுறையினரின் பெயரை கூறி தர்ப்பணம் கொடுப்பது விசேஷம்.
பின்னர் காக்கைக்கு சாதத்துடன் எள் கலந்தோ, அல்லது அவரவர் குடும்ப வழக்கப்படி உணவு வைக்கப்படும். இதை காக்கை வந்து எடுத்தால் அது முன்னோர்களே வந்து உணவை உண்டுவிட்டு நமக்கு ஆசி வழங்கிவிட்டு போவதாக ஐதீகம்.

பித்ருக்களுக்கு மாதம்
வேதமுறைப்படி பித்ருக்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை தண்ணீரும், ஆண்டுக்கு ஒரு முறை உணவும் அளிக்கப்பட வேண்டும். மாதந்தோறும் தண்ணீர் என்பது எள்ளையும் தண்ணீரையும் கரைத்து விடுவதுதான். ஆண்டுதோறும் உணவு எனப்படுவது அவர்களுக்கு கொடுக்கப்படும் சிரார்த்தமாகும்.

உணவில் ஐதீகம்
இதுபோல் நாம் காக்கைக்கு வைக்கும் உணவில் பல ஐதீகங்கள் உள்ளன. இதிலும் அந்த காக்கை எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுகிறது என்பதையும் சிலர் பார்ப்பதுண்டு. அமாவாசைகளில் தை, ஆடி, மஹாளய அமாவாசை ஆகியன முக்கியமாக பெருவாரியான மக்களால் பித்ருக்களுக்கு படையலிட்டு கொண்டாடப்படுகிறது.

உண்ட மயக்கம்
இவ்வாறு வீட்டில் படையல் இட்டு விட்டு அதை எடுத்துக் கொண்டு காக்கையை கா கா என அழைத்தால் போதும் வந்துவிடும். உடனே உணவை எடுத்துவிடும். இதெல்லாம் சில இடங்களில்தான் நிகழ்கிறது. பெரும்பாலான இடங்களில் காக்கைகளை அழைக்க காக்கா கத்து கத்தினாலும் வருவதில்லை. ஒரு சில நேரங்களில் அப்படியே வந்தாலும் "பருந்து பார்வையில்" நாம் வைத்த உணவில் வடை, அப்பளம் இருக்கிறதா என பார்த்துவிட்டுதான் "தலைவர்" லேண்டிங் ஆவார்! ஒரு வேளை நமது மெனுவில் வடையோ அப்பளமோ இல்லாவிட்டால் அப்படியே யூடர்ன் அடித்து வேறு பக்கம் வண்டியை திருப்பிவிடுவார். இன்னும் சில நேரங்களில் லஞ்ச் டைமை தாண்டி என்னதான் கூவினாலும் பக்கத்தில் இருக்கும் மரத்தில் இருந்தாலும் பல வீடுகளில் உண்ட மயக்கத்தில் ஹாயாக இருந்துவிடுவார்.

தோட்டத்தில்
அந்த காலத்தில் நம் வீட்டு வாசலில் தோட்டத்தில் உள்ள மரங்களில் காக்கைக்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. அந்த அளவுக்கு அவை நம்மோடே வளர்ந்து வந்தன என சொல்லலாம். ஆனால் இன்று இவை கூடு கட்டுவதற்கு இருந்த மரத்தை கூட வெட்டிவிட்டு அந்த இடத்தில் நாம் கூடு (வீடு) கட்டிக் கொண்டுள்ளோம். இதன் விளைவு, இன்று முன்னோர்களுக்காக வைக்கப்படும் உணவை அளிக்க காக்கைகளை காசு கொடுத்து அது இருக்கும் இடத்திற்கு நாம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது வேதனையை தருகிறது. ஆம் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. நபர் ஒருவர் காக்கையை வைத்து கொண்டிருக்கிறார், அவரை தேடி மக்கள் கைகளில் இலையில் உணவுடன் வருகிறார்கள். வரிசையாக கைகளை உயர்த்தி காட்டுகிறார்கள். அந்த நபர் அந்த காக்கையை உணவை உட்கொள்ள வைக்கிறார். இதற்கு அவருக்கு ஒரு இலைக்கு ரூ 50 வாடகையாக செலுத்த வேண்டும்.

மிகச் சிறந்த உதாரணம்
இந்த நபருக்கு போன் செய்தால் ஒவ்வொரு ஏரியாவாக செல்கிறார். அங்கு மக்கள் படையலுடன் தயாராக இருக்கிறார்கள். காசை கொடுத்து காக்கையை உணவை உட்கொள்ள வைத்து நம் முன்னோர்கள் உட்கொண்டதாக திருப்திப்படுகிறார்கள். இயற்கையை நாம் அழித்தால் அது நம்மை அழித்துவிடும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த சம்பவத்தை சொல்லலாம்.

காலம் மாறி போச்சு
கா கா வென கத்திய காலம் போய் காக்கா போல் அலைந்து திரிந்து காசு கொடுத்து உணவை உட்கொள்ள வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் இந்த காக்கை ரொம்ப கிராக்கி பிடித்ததாக இருக்கும் போல! பார்த்திபன் படத்தில் surety கையெழுத்து போட வடிவேலை அணுகுவார். அவரும் வங்கிக்கு சென்று கையெழுத்திடும் போது எத்தனை... என தெனாவட்டாக கேட்பார். அது போல் இந்த காக்காவும் சிலிர்த்து கொள்கிறது. போதாக் குறைக்கு காக்கைவை வாடகைக்கு விடும் நபரோ சுவற்றின் மீதெல்லாம் ஏறி காக்கையை உணவு உட்கொள்ள வைக்கிறார்!.

கோமியம்
இலவசமாக கிடைத்த மாட்டுச் சாணம், கோமியம் , வறட்டி இவையெல்லாம் இன்று பிசினஸாக காசு கொடுத்து வாங்கி வரும் நிலையில் இந்த பிசினஸும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இப்படியே இயற்கையை அழித்து வந்தால் இனி Thirsty crow கதையில் இடம்பெற்ற காக்கையின் போட்டோவை காட்டிதான் பித்ருக்களுக்கு சோறு வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications