தாமரை தண்டு சிப்ஸ் முதல் ஜவ்வரிசி மினி இட்லி வரை! சின்னி ஜெயந்த் மகன் திருமணத்தில் கலக்கிய மெனுக்கள்
சென்னை: நடிகர் சின்னி ஜெயந்தின் மகனும் விழுப்புரம் ஆட்சியருமான ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு கடந்த 25 ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் அன்றைய தினம் திருமண விருந்தாக மாதம்பட்டி ஐஸ்வர்யா சமையல் குழுவினர் பரிமாறிய விருந்தை, வந்திருந்தவர்கள் சுவைத்து மகிழ்ந்து பாராட்டினர்.
நடிகர் சின்னி ஜெயந்த் 1980களில் காமெடியில் கலக்கியவர். ரஜினியுடன் நடித்த போது ஆன்ஆன்ஆன்.... என சவுண்ட் கொடுத்தது பிரபலம். இவர் குணச்சித்திர நடிகராகவும் கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் நடித்துள்ளார்.

இவர் அஷ்டலட்சுமி கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஸ்ருதன் ஜெய் கடந்த 2019ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதி அதில் 75ஆவது ரேங்க் வாங்கியுள்ளார். இவர் முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணைச் செயலாளராக பணியாற்றினார்.
அதன் பிறகு அவருக்கு தமிழகத்திலேயே பணி ஒதுக்கப்பட்டது. முதலில் தூத்துக்குடி பயிற்சி துணை ஆணையராகவும், பிறகு திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை அலுவலகத்தில் திட்ட அலுவலகராக நியமிக்கப்பட்டார்.
இவர் மானஸ்வி என்ற ஐஏஎஸ் அதிகாரிகளை கடந்த 25 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் ஆளுநர் தமிழிசை, அமைச்சர்கள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் வருகை தந்து மணமக்களுக்கு ஆசிகளை வழங்கினர்.
திருமணம் என்றாலே விருந்துதான் பிரதானம். தங்கள் திருமணத்திற்கு வருவோர் விருந்தை சாப்பிட்டுவிட்டு மூக்கின் மீது விரலை வைக்க வேண்டும் என நினைப்பார்கள். இதற்காக கேட்டரிங் சர்வீஸை பார்த்து பார்த்து தேடுவார். அந்த வகையில் சின்னி ஜெயந்தின் மகன் திருமணத்திற்கு கேட்டரிங் சர்வீஸ் செய்ய வந்தவர் மாதம்பட்டி ஐஸ்வர்யா.
இவர் Wedding Food Flavours by Madhampatti Nagaraj என்ற நிறுவனத்தின் சிஇஓ. இவரும் கோவை பெண்தான். மாதம்பட்டி ரங்கராஜின் சித்தப்பா மகள்தான் ஐஸ்வர்யா. தனது தந்தையின் பிசினஸை ரங்கராஜ் எடுத்து நடத்துவது போல் தனது தந்தையின் சமையல் பிசினஸை ஐஸ்வர்யா எடுத்து நடத்துகிறார்.
ஐஸ்வர்யா, சின்னி ஜெயந்தின் மகன் திருமணத்திற்கு என்னென்ன ஐட்டங்களை செய்தார் என்பதை ஒரு டிவி சேனலில் பகிர்ந்துள்ளார். அதில் பால் பாயாசம், சோயா கோலா உருண்டை, தாமரை தண்டில் ஒரு சிப்ஸ், தந்தூரி மலாய் , ஜவ்வரிசி இட்லி, பலாப்பழ அல்வா, பீட்ரூட் பூரி, ஒயிட் சாக்லேட் பாதாம் பிஸ்கெட், சாக்லேட் டிப்டு டேட்ஸ், காஜன் பன்னீர் பாப்கார்ன், மக்னா மசாலா உள்ளிட்ட மெனுக்கள் இருந்தன.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications