Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவர்தான் அந்த கட்சிக்கு போக போறாரா? படக்குனு பார்க்குது பாஜக.. அஸ்திவாரத்தை பலப்படுத்தும் எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வரும்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி என்ன செய்ய போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சரத்குமாரை பொறுத்தவரை, அதிமுகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி இல்லை என்பதை பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று சரத்குமார் சொன்னதுமே, சமகவில் உள்ள ஒருதரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.. அதனால், ஒருதரப்பினர் அங்கிருந்து கிளம்பி அதிமுகவிலும் இணைந்தனர்.

 Does Actor Sarathkumar take Big decision about Alliance and SMK may join with AIADMK Alliance soon, say sources

சரத்குமார்: பிறகு சமகவின் 17-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், சரத்குமார் பேசியபோது, "2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கஷ்டமோ, நஷ்டமோ சமத்துவ மக்கள் கட்சி தனியாக போட்டியிட வேண்டும்... மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமல்ல, ஒருமுறை சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, "எம்பி தேர்தலைவிட சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் சமத்துவ மக்கள் கட்சி பணியாற்றி வருகிறது. வருகின்ற எம்பி தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தலிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட விரும்புகிறது. அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை" என்று கூறியிருந்தார்.

பாஜக சரத்குமார்: போதாக்குறைக்கு பாஜகவையும் சரத்குமார் விமர்சித்திருந்தார். "இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு கர்நாடகாவில் இருந்தாலும் தண்ணீர் தருவதாக இல்லை... ஒரு நாட்டுக்குள் இந்த பிரச்சினையை ஏன் தீர்க்க முடியவில்லை? இதில் மத்திய அரசு தலையிட்டு தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்..

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்கிறார்களே, அந்த ஒரே நாட்டில் இப்படியான பிரச்சினைகள் வருவது வேடிக்கையாக உள்ளது.. பாராளுமன்ற தேர்தல் எப்படியும், பண நாயகமாக தான் இருக்கும். எம்பி தேர்தலில் நின்றால் ரூ.100 கோடி வேண்டும் என்கிறார்கள்... சட்டசபை தேர்தல் என்றால் ரூ.25 கோடி வேண்டும் என்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? என்று தெரியவில்லை என்று சாடியிருந்தார் சரத்குமார்.

திமுக, அதிமுக: ஆக, அதிமுகவையும் சரத்குமார் விமர்சித்திருந்தார்... பாஜகவையும் விமர்சித்திருந்தார்.. அதேசமயம், திமுகவை அவ்வளவாக விமர்சிக்காமலும் இருந்தார்.. அதனால், திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பிருக்குமோ? என்ற சந்தேகமும் கிளம்பியது..

சமீபத்தில் இடைக்கால பட்ஜெட்டை ஆதரித்து சரத்குமார் பேசியிருந்தால், ஒருவேளை பாஜகவுடன் சரத்குமார் கூட்டணி வைக்க போவதாக தகவல்கள் கிளம்பின.. இப்படிப்பட்ட சூழலில், சமத்துவ மக்கள் கட்சியை, அதிமுகவில் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் பரபரக்கின்றன..

அதிமுகவை பொறுத்தவரை இதுவரை யாருடனும் கூட்டணி முடிவாகவில்லை.. மெகா கூட்டணியை முயற்சிக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறார். இதற்காக பெரிய பெரிய கட்சிகளை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்..

சரத்குமார்:
மற்றொருபக்கம், குட்டி குட்டி கட்சிகளையும் இழுத்து போட்டு, கூட்டணி அமைக்க முயல்வதாக தெரிகிறது. அந்தவகையில், அதிமுகவின் சில மூத்த தலைவர்கள், சரத்குமாரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா காலத்தில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகளுக்கு மேல் இடம்பெற்றிருந்த நிலையில், திடீரென விலகி அதிர்ச்சி தந்தது. இப்போது மீண்டும் கூட்டணிக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..

அதிமுக - மதுவிலக்கு: இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.. சமீபத்தில் நடந்த ச.ம.க. ஆலோசனை கூட்டத்தில் 9 தீர்மானங்கள் இயற்றப்பட்டது. இதில், ஒரு தீர்மானத்தில், "படிப்படியாக தமிழகத்தில் மதுவிற்பனையை குறைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்" என்பதும் முடிவாகி உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், அதிமுக கூட்டணியில் சமக ஐக்கிய வாய்ப்புள்ளதாக சொல்வதால் பரபரப்பு எகிறி வருகிறது.. எதுவானாலும் இன்னும் 2 நாளில் இதுகுறித்த முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+