ஆளுநர் அதிகாரத்திற்கு வேட்டு? பிரிவு 361 தொடருமா? சாட்டையை கையில் எடுத்த சந்திரசூட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 361 பிரிவு குறித்து உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கி இருக்கும் நிலையில், அந்தச் சட்டப் பிரிவு பற்றியும், எதற்காக இந்த அதிகாரம் வழங்கப்பட்டது என்பது பற்றியும், நீக்கப்பட வேண்டும் என்ற வாதம் சரியானதுதானா என்பது பற்றியும் தெரிந்துகொள்வோம்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து வருவதைப்போலவே மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்-க்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையில் ஒரு மோதல் பல மாதங்களாக நடந்துவருகிறது. ஆனந்த போஸ் மீதான பாலியல் வன்கொடுமை புகார் வெளிச்சத்திற்கு வந்ததற்குப் பிறகு, அது இந்திய அளவில் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

Supreme Court Article 361

இந்தப் பாலியல் வன்முறை ஒஉகார் வழக்கில் கிரிமினல் வழக்குகளிலிருந்து ஆளுநர்களுக்கு விலக்கு அளிக்கக்கூடிய சட்டப் பிரிவு 361ஐ மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதைக் கடந்த வெள்ளிக்கிழமை அதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் மறு ஆய்வு செய்வது தொடர்பாகத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் மேற்குவங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த வக்கில் அரசையும் ஒரு பகுதியாகச் சேர்த்துள்ளது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக விசாரிக்க அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியின் உதவியை உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

ஆளுநர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 361பிரிவு இனி தொடருமா? அல்லது நீக்கப்படுமா? என்பது பற்றிய விவாதங்கள் மீண்டும் கேட்க தொடங்கி உள்ளன. இது நீக்கப்பட்டால், ஆளுநர்கள் மீது கிரிமினல் வழக்குப் போட முடியும். அது மிகப்பெரிய மாற்றங்களை எதிர்காலத்தில் கொண்டு வரும்.

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரும் சட்ட நுட்பங்களை அறிந்தவருமான தராசு ஷ்யாம் 361பிரிவு தொடர்பாக சில விளக்கங்களை ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநராக சென்னா ரெட்டி இருந்த காலத்தில் ராஜ்பவனின் அவரது ஆலோசனை குழுவிலிருந்தவர். ஆகவே, இவரது அனுபவம் முக்கியத்துவம் பெற்றது.

சட்டப் பிரிவு 361 நீக்கப்படுமா? என்பது பற்றி ஷாயாம் பேசும்போது, “ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் ஒரு அதிகாரம் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அதிகாரம் முழு அதிகாரம் கிடையாது. சில விதிமுறைகளுடன் கூடிய அதிகாரம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆளுநர் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைத் தொடர முடியாது. பதவிக் காலம் முடிந்த பிறகு தொடரலாம். அப்படிப் பதவிக்காலம் முடியும் வரை காத்திருந்தால், சாட்சிகள் எப்படி இருக்க முடியும்?

மேற்கு வங்க ஆளுநர் மீது ராஜ்பவனில் வேலைபார்த்த பணிப்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க தொடங்கி இருக்கிறது. நீதிமன்ற மனுவில் புகார் கொடுத்த பெண்ணின் பெயர் மறைக்கப்பட்டுவிட்டது. அதுதான் சட்டப்படி சரி. ஆகவே, அவர் யார் என நமக்குத் தெரியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம், சட்டத்தின் கீழ் அனைவரும் சமம். இதன்படி பார்த்தால், ஆளுநர் மட்டும் எப்படி விலக்குப் பெற முடியும் என்பதுதான் இந்தப் பாலியல் புகார் வழக்கின் சாரம். அப்படி விலக்குப் பெற முடியாது என்பதுதான் வாதம்.

ஆளுநர்களுக்கு தனி அதிகாரம் ஏன் கொடுக்கப்பட்டது என்பதை முதலில் விளக்கிக் கொள்வது நல்லது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக பல சமஸ்தானங்களாக இருந்தது. கிட்டத்தட்ட 500 சமஸ்தானங்கள் இருந்தன. இந்தியா ஒரே நாடாக ஒன்று சேர்க்கப்பட்ட போது சமஸ்தான மன்னர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. தனிக் கொடி வைத்துக் கொள்வது, மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தருவது என்று விதி வகுக்கப்பட்டது. அதற்கு மன்னர் மானியம் என்று பெயர்.

இவர்களுக்கு தனி அதிகாரம் கொடுப்பதைப் போலவே குடியரசுத் தலைவருக்குத் தனி அதிகாரம் தரலாம் என அரசு விரும்பியது. ஆகவே, தரப்பட்டது. பின்னர் அதை ஆளுநர்களுக்கும் சேர்த்து விரிவுபடுத்தினார்கள். அதன்பின்னர் 72இல் இந்திரா காந்தி மன்னர் மானிய ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதனால் சமஸ்தானங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் பறிக்கப்பட்டது. இன்று அனைவரும் சட்டத்திற்கு முன் சமம்தான்.

அதன்பின்னர் ஆளுநர் அதிகாரம் பற்றி கேள்வி எழுந்தது. அது குறித்து வழக்குகள் போடப்பட்டன. இப்போது மேற்குவங்க பெண் போடுவதற்கு முன்பே வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆளுநர் மீது வழக்குப் போடமுடியாது என்பது கிடையாது. போடுவதற்குச் சட்டத்தில் இடம் உள்ளது. அதற்குப் பெயர் Impeachment. அப்படி என்றால், வழக்குக்கான காரணம் என்ன என்பது சொல்லப்பட வேண்டும்? அது குறித்து விசாரணை நடத்தப்பட்ட வேண்டும். அந்த அறிக்கையின்படி ஆளுநருக்கு எதிராகச் சட்டமன்றம் மற்றும் மேல் சபையில் தீர்மானம் கொண்டுவந்து, அது பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெறவேண்டும். அதன்பின்னர் வழக்குத் தொடரலாம். அதுதான் Impeachment.

முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா கூட அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டிக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். Impeachment சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை எனக் கூறி அன்றைய ஜனாதிபதி அனுமதி தரவில்லை. 2011இல் மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த ராம் நரேஷ் யாதவ் மீது வியாபம் முறைகேடு தொடர்பாக Impeachment கொண்டுவந்தார்கள். உபி ஆளுநர் பி எல் ஜோஷி மீது இதே வழக்குப் போடப்பட்டது.

அடுத்து மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன், கேரள ஆளுநர் சதாசிவம், நாகலாந்த் ஆளுநர் ஆச்சாரியா இப்படிப் பலர் மீது Impeachment கொண்டுவரப்பட்டது. இதில் சிலர் பதவி முடிவதற்கு முன்பே ராஜினாமா செய்தனர். அதனால் வழக்கு நின்றுபோனது. சிலருக்கு முறையான ஆதாரம் இல்லை என்று வழக்கைச் சட்டமன்றமே நிராகரித்தது. இதுதான் இதுவரையான Impeachment வழக்குகளின் நிலவரம்.

மேற்குவங்கத்துப் பெண் ஆளுநர் மீதான புகாரை முதல்வர் மம்தாவைச் சந்தித்து அளித்துள்ளார். இதே ஆளுநர் மீது ஒடிசாவைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர் புகார் அளித்திருந்தார். மம்தா நினைத்தால் Impeachment மூலம் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்து ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காக வாய்ப்பு இருக்கிறது. இந்தியா ஒரு குடியரசு நாடு. அப்படி உள்ள போது ஆளுநருக்கு தனி அதிகாரம் என்பது மறுபரிசீலனை செய்யப்பட்ட வேண்டும்.

ஏனென்றால், சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதை நாம் ஏற்றிருக்கிறோம். குடியரசுத் தலைவர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுகிறார். அவருக்கே தனி அதிகாரம் கூடாது என்கிறோம். ஆளுநர் பதவி என்பது நியமன பதவிதான். அப்படிப் பார்த்தால் இந்த 361 பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பது சரியான வாதம் தான்.

ஆகவே, இந்த வழக்கை உச்சநீதிமன்ற இந்தத் திசையில்தான் எடுத்து செல்லும். விவாதத்தின் போதுகூட ஒரு இடைக்கால உத்தரவை நீதிமன்றம் வழங்கலாம். இந்த விசாரணை தொடர்பாக மேற்குவங்க ஆளுநர் தனது அலுவலக ஊழியர்கள் யாரும் காவல்துறை விசாரணையில் வாக்குமூலம் கொடுக்கக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பித்துள்ளார். அதை நீக்க வேண்டும். அதன்பிறகு விசாரணை காவல்துறை நடத்த முடியும். அதற்கும் நீதிமன்றம் உத்தரவு தேவை. 361 பிரிவை உச்சநீதிமன்றத்தால் நீக்க முடியுமா? என்றால் முடியாது. ஏனென்றால் அரசியல் சாசன சட்டத்தின் அந்த அதிகாரம் உள்ளது. அதை உடைக்க வேண்டும். அதற்காகத்தான் அட்டர்னி ஜெனரல் உதவியை நீதிமன்றம் கோரியுள்ளது.

மூன்று குற்றவியல் சட்டங்களையே மத்திய அரசு மாற்றி உள்ளது. அப்படிப் பார்த்தால் இதையும் மத்திய அரசு மாற்றலாம். அது நடக்குமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. ஆனால், இதில் ஒரே ஆறுதல் உச்சநீதிமன்றம்தான். அது லேசிவில் வழக்கு விட்டுவிடாது” என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+