கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்? கேஸ் டேங்கர் லாரி ஓனர்கள் ஸ்ட்ரைக்.. சப்ளை அவ்ளோதானா
சென்னை: ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ள காஸ் டெண்டரில், தகுதியான அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் அனுமதி வழங்கக்கோரி, தென்மண்டலம் முழுதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கியிருக்கிறது.. இதனால் தமிழகம் உட்பட மாநிலங்களில் கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை எழுந்துள்ளது.. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகள்தான் என்ன?
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

இந்த சங்கத்தில் உள்ள கேஸ் டேங்கர் லாரிகள், மத்திய அரசுக்கு சொந்தமான IOC எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் , BPC எனப்படும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், HBC எனப்படும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் போன்ற ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் கேஸ் கொண்டு செல்லும் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
டேங்கர் லாரி உரிமையாளர்கள்
எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெற்ற டேங்கர் லாரி உரிமையாளர்கள் மூலம் இப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன... இதனிடையே, நடப்பாண்டு முதல் வரும் 2030ஆம் வருடம் வரையிலான ஒப்பந்தம் குறித்து, எண்ணெய் நிறுவனங்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன.
அவைகளில், சில நிபந்தனைகள் தங்களுக்கு ஏற்கத்தக்கதாக இல்லை என்று லாரி உரிமையாளர்கள் ஆட்சேபத்தை வெளியிட்டனர்.. ஆனாலும், அவர்களது அதிருப்தியை எண்ணெய் நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை.. இதனால் டேங்கர் லாரிகள் கடந்த மார்ச் மாதத்தில் போராட்டங்களை நடத்தியது.
எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர்கள்
இதுகுறித்து தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜனும் செய்தியாளர்களிடம் விளக்கியிருந்தார். அத்துடன், 2025 - 2030ம் ஆண்டுக்கான ஒப்பந்தத்திலுள்ள கடுமையான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அத்துடன் அறிவித்தபடியே கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தையும் நடத்தினர்.. ஆனால், 4 நாட்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் பயனாக எண்ணெய் நிறுவனங்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டன. அதில், ஏற்கனவே இருந்த பழைய டெண்டர் விதிமுறைகளே, புதிய டெண்டரிலும் அமல்படுத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், 4 நாட்களுக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மீண்டும் ஸ்ட்ரைக்
எனினும், போராட்டத்தினால் கேஸ் தட்டுப்பாடுகளும் தமிழகத்தில் ஆங்காங்கே ஏற்பட்டிருந்தது நினைவிருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் கேஸ் டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.
காரணம், இந்த வருடத்துக்கான வாடகை ஒப்பந்தத்தில் 700-க்கும் அதிகமான கேஸ் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லையாம்.. இதுதொடர்பாக ஆயில் நிறுவனங்களுடன் தென்மண்டல கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த பலனும் கிடைக்கவில்லை.
அவசர கூட்டத்தில் முடிவு
எனவேதான், நாமக்கல்லில் தென்மண்டல கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டமும் சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் சண்முகப்பா செய்தியாளர்களிடம் பேசும்போது, "எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து கேஸ் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடும் கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம் 5 வருடங்களாகும். ஆனால், புதிய ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமுறைகளை காரணம் காட்டி, 700க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.
வாடகை கட்ட முடியவில்லை
இதனால் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வேலை கிடைக்காத வண்டிகளை ஓட்டாத நிலைமை உள்ளது.. இந்த வாகனங்களுக்காக கடனையும் கட்ட முடியவில்லை.. எனவேதான் மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவன அதிகாரிகள் நாமக்கல் நகருக்கு வருகை தந்து, கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 2016 வருடத்துக்கு மேலுள்ள மாடலில், அனைத்து கேஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
அதுவரை தென்னிந்தியா முழுவதும் உள்ள அனைத்து, 5,000 கேஸ் டேங்கர் லாரிகளையும் இயக்காமல் நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போகிறோம்.. தகுதியான அனைத்து கேஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு உத்தரவாதம் வரும்வரை காலவரையற்ற ஸ்ட்ரைக் போராட்டம் தொடரும் என்றார்.
சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு
அதன்படியே தற்போது கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள்..
இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்பட 5 மாநிலங்களில் சமையல் கேஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.. அன்றாடப் பயன்பாட்டில் மிக முக்கியமான கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், வீடுகள், ஹோட்டல் உள்ளிட்டவை கேஸ் கிடைக்காமல் அவதிப்படும் நிலைமையும் உருவாகியிருப்பதாகவும் தெரிகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications