• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மட்டன், சிக்கன், கொழுப்பு அள்ளி சாப்பிடலாம்.. கார்போ உணவை குறைக்கனும்.. பேலியோ டயட்.. ஏகப்பட்ட நன்மை

Google Oneindia Tamil News

சென்னை: பேலியோ உணவு முறை என்றால் என்ன, பேலியோ உணவு முறையால் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம் என்பது குறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

தற்போது என்னிடம் கேட்கப்படும் பல கேள்விகளுள் சில... பேலியோ என்றால் என்ன? பேலியோவினால் நீரிழிவு சரியாகுமா? வெண்குஷ்டம் சரியாகுமா?? மூட்டு வாதம் சரியாகுமா??? ஸ்லீப் ஆப்னியா சரியாகுமா??? கேன்சர் குணமாகுமா?? கர்ப்பபை கட்டி சரியாகுமா??? என்று கேட்கின்றனர்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா?.. விளக்கும் அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா?.. விளக்கும் அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா

 கேள்விகள்

கேள்விகள்

இது போன்று பலருக்கும் கேள்விகள் இருக்கும் தங்களுக்கு வந்த நோய்களை பேலியோ உணவு முறை சரி செய்யுமா என்ற ஆவல் இருப்பது புரிகிறது. இதற்கு என்னுடைய பதில் பின்வருமாறு:

- பேலியோ என்பது ஆரோக்கியமான உணவு முறை மாற்றம்
- நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மாவுச்சத்தை குறைத்து கொழுப்புணவை பயமின்றி உண்டு அதன் மூலம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் முயற்சி.
- மாவுச்சத்தை குறைப்பது மூலமாக நாம் நம்மை சூழ்ந்துள்ள பல தொற்றா நோய்களை வெல்ல முடியும்.
- உடல் பருமன் தான் பின்னாளில் நீரிழிவு , ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றை வரவழைக்கிறது. ஆகவே பேலியோ கொண்டு நீரிழிவையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தலாம்.
- இதே உணவு முறையில் நீடிக்கும் வரை இந்த நீரிழிவும் ரத்த அழுத்தமும் பொட்டி பாம்பு போல அமைதியாய் இருக்கும்.
மீண்டும் அதிக மாவுச்சத்துள்ள உணவு முறைக்கு சென்றால் அனகோண்டாவாக மாறிவிடும் என்பதை தெளிவாக பதிவு செய்கிறேன்.

 குப்பை உணவுகள்

குப்பை உணவுகள்

- குப்பை உணவுகளை நிறுத்தி விடுவதாலும், எண்ணெயில் பொறித்த உணவுகளுக்கு குட் பை சொல்வதாலும் நல்ல கொழுப்புள்ள உணவுகளை சேர்ப்பதாலும் பேலியோ உணவு முறையில் இருக்கும் வரை இதய நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.
- நாம் கோதுமை , எண்ணெயில் பொறித்த உணவுகள் , ரீபைண்டு சைவ எண்ணெய்கள் , ப்ராசஸ்டு உணவுகளை தவிர்ப்பது நம்மை ஆட்டோ இம்யூன் வியாதிகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
- பேலியோவில் இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் ரிவர்ஸ் செய்யப்படுவதால் இன்சுலின் ரெசிஸ்டென்சினால் வரும் பல வியாதிகளான நீரிழிவு, உடல் பருமன், பி சி ஓ டி போன்றவை சரியாகும்.
- நம் ஊரில் முக்கால்வாசி கிட்னி நோயாளிகள் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாததால்தான் சிறுநீரக நோய்க்கு ஆளாகியுள்ளனர். ஆகவே இன்று நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்தால் நாளைய கிட்னி டேமேஜை தடுக்கலாம் .
- பேலியோ தரும் நன்மைகள் ஒருபுறம் இருக்க பலரும் தங்கள் அனைத்து வியாதிகளும் தீருமா என்று கேட்கும் போது எங்கள் பதில் "தீர்ந்தால் நல்லது ஆனால் எம்மால் உறுதியாக கூற இயலாது. நீங்கள் உணவு முறைக்கு மாறிப் பாருங்கள். நன்மை கிடைத்தால் தொடருங்கள்" என்பதே. நவீன மருந்துவத்தின் எதிக்கல் கொள்கைகளுள் ஒன்று
"நமக்கு வரும் நோயாளிகளுக்கு எதற்கும் கண்டிப்பாக சரியாகும் என்று உறுதி கொடுக்க கூடாது என்பதே"
நாட்டில் போலி மருத்துவர்கள் அனைவரும் கூறுவது எல்லா நோயையும் குணப்படுத்தி விடுவேன் என்பது தான். இதை குணப்படுத்துகிறேன் என்று கூறி பணம் கொள்ளையடிப்பதே இன்றைய ஃபேஷன்.

நம்பிக்கை

நம்பிக்கை

மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதே இன்றைய பணம் கொழிக்கும் யுக்தி. பேலியோ என்பது மற்றொரு கல் வைத்தியமோ, பட்டினி வைத்தியமோ, ஈமு கோழி க்ரூப்போ அல்ல. இந்த உணவு முறை மாற்றத்தால் பயனடைந்த மக்கள் எடுத்துச் செல்லும் ஒரு ஆரோக்கியத்துக்கான இயக்கம். இதில் பொதுநலனே முன்னிற்கிறது.

எந்த நோயை குணப்படுத்தும்

எந்த நோயை குணப்படுத்தும்

பேலியோ எந்தெந்த நோய்களை குணப்படுத்தும்?? உங்களுக்கு தவறான உணவு முறையால் வந்திருக்கும் நோய்களை பேலியோ கட்டுப்படுத்தும் ( பேலியோவில் தொடரும் வரை). உதாரணம் உடல் பருமன், நீரிழிவு, ரத்த கொதிப்பு, சைனஸ், ஒற்றைத்தலைவலி, ஆட்டோ இம்யூன் வியாதிகள் , இன்னும் பல. எந்தெந்த நோய்களை குணப்படுத்தாது?? தவறான உணவு முறையன்றி நமக்கு வரும் தொற்றும் நோய்கள் (infectious diseases) , பால்வினை நோய்கள், மரபணுக் கோளாறுகளால் ஏற்படும் நோய்கள் ( hereditary diseases)

டைப் 1 டயாபட்டீஸ்

டைப் 1 டயாபட்டீஸ்

உதாரணம்: டைப் 1 டயாபடிஸை கட்டுப்படுத்தும் ஆனால் இன்சுலின் கட்டாயம் தேவை) அறுவை சிகிச்சையால் மட்டுமே சரியாகும் நோய்கள்( diseases which can be treated only by surgery) , பிறவியிலேயே வந்த நோய்கள் ( congenital deformities)போன்றவற்றிற்கும் பேலியோவிற்கும் சம்பந்தம் இல்லை . ஆனால் இவர்கள் பேலியோ எடுப்பதில் தவறேதும் இல்லை.

கர்ப்பப்பை கட்டி

கர்ப்பப்பை கட்டி

சிலர் கர்ப்பபையில் 10 சென்டிமீட்டர் கட்டியை வைத்து கொண்டு பேலியோ குணப்படுத்துமா என்று கேட்பதும் சிலர் ரத்த புற்று நோய் இருக்கிறது. கீமோ எடுக்காமல் பேலியோவைக் கொண்டு சரிசெய்ய இயலுமா?? என்று கேட்பதும் இன்னும் சிலர் தமக்கு வந்த ஹெர்னியாவுக்கு பேலியோவில் வழி உண்டா என்று கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது.

 4 விஷயங்கள்

4 விஷயங்கள்

முதலாவது, #பேலியோ ஒரு உணவு அறிவியல். இதைக் கொண்டு நமக்கு வர இருக்கும் பல தொற்றா நோய்களை உறுதியாக தடுக்க முடியும் . இதை நோய் தடுப்பு மருத்துவம் என்போம். Primordial prevention.

இரண்டாவது, நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவருக்கு அதாவது குண்டாய் இருந்து இன்னும் நீரிழிவு வராதவருக்கும் நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு நோய்கள் வராமல் தடுக்க முடியும் .இது primary prevention.

மூன்றாவது, பலருக்கும் நீரிழிவு ரத்த அழுத்தம் போன்றவை உடலில் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும். அவர்களின் அப்போதைய நிலையை பொறுத்து பேலியோ அந்த பிரச்சனைகளை சீர் செய்யும் . மேலும் பிரச்சனை முற்றவிடாமல் தடுக்கும். இது secondary prevention. இவர்களுக்கு பேலியோவுடன் மருந்து மாத்திரை தேவைப்படலாம். இவர்களுக்கு மருத்துவ பரிந்துரை தேவைக்கேற்ப பெறுவது நல்லது.

நான்காவது, இன்னும் பலருக்கு நீரிழிவு ரத்த அழுத்தம் போன்றவை கோரத் தாண்டவம் ஆடி பல முக்கிய ஸ்பேர் பார்டுகளை பழுதாக்கியிருக்கும். உதாரணம் - இதய நோய், ஸ்ட்ரோக் , கிட்னி பாதிப்பு போன்றவை இவர்களுக்கு பேலியோ கொண்டு மேலும் சிக்கல் வராமல் கட்டுப்படுத்தலாம். ஆனால் ஏற்கனவே வந்த பிரச்சனையை சீர் செய்ய இயலாது. அதற்கு மருந்து மாத்திரை எடுத்ததே ஆக வேண்டும் . இதை tertiary prevention என்கிறோம். இதற்கு மருத்துவ பரிந்துரை கட்டாயம் தேவை.

உணவு முறை மாற்றம்

உணவு முறை மாற்றம்

ஆகவே,நீரிழிவு போன்ற தொற்றா நோய்களை நமக்கு வராமல் தடுப்பதே நமது முதல் பணி அதில் முக்கியமானது உணவு முறை மாற்றம். அதைத் தான் பேலியோ மூலம் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் மீறி இந்த நோய்கள் வந்தவர்களுக்கு அதை உணவு முறை கொண்டு கட்டுப்படுத்த பயிற்சி அளிப்பது இரண்டாவது பணி. மூன்றாவது மிக முக்கிய பணி. இந்த உணவு முறை குறித்து அறியாதவர்க்கு இதை எடுத்து சொல்வது முகநூலில் பேலியோ எனும் குறை மாவு உணவு முறை குறித்த விழிப்புணர்வை ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வழங்கி வருகிறது.

பேலியோ அறிவியல்

பேலியோ அறிவியல்

இந்த குழுமத்தை தொடங்கி தான் பெற்ற பேலியோ குறித்த அறிவியலை பலருக்கும் எத்தி வைத்தவர் திரு நியாண்டர் செல்வன் அவர்கள் அவர் வழியே பல நிர்வாகிகள், தன்னார்வலர்கள் , எங்களைப்போன்ற மருத்துவர்கள் இணைந்து இந்த வாழ்வியல் மாற்றம் குறித்து சிந்தித்தும் எழுதியும் பேசியும் பரப்புரை செய்தும் வருகிறோம். ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றம் குறித்து சிந்திக்கும் ஒவ்வொருவரும் எடுத்து வைக்கும் முதற்படியாகவும் சிறந்த முடிவாகவும் பேலியோ வாழ்வியல் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

English summary
Sivagangai Government Doctor Farook Abdulla say about What is paleo diet> What are the diseases cured by this diet?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X