சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டில் நாய், பூனை வச்சிருக்கீங்களா?.. கொரோனா வந்தா பிராணிகளுக்கு மாஸ்க் போடலாமா.. டாக்டர் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தொற்று வந்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து பேராசிரியர் டாக்டர் முத்துச் செல்லக் குமார் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர் டாக்டர் முத்துச் செல்லக் குமார் தனது யூடியூப்பில் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில் இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது. அதாவது வீட்டில் வளர்க்கக் கூடிய செல்ல பிராணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுமா என மக்களிடம் சந்தேகம் இருக்கிறது.

இது ஒரு வெளவ்வாலிடமிருந்துதான் மனிதனுக்கு வந்தது. இதனிடையே வேறு ஒரு விலங்கிற்கு இது பரவியிருந்து பின்னர் மனிதனுக்கு பரவியிருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடே இல்லை... கோமா நிலையில் இருந்து வெளியே வராத காங். - பிரதமர் மோடிகொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடே இல்லை... கோமா நிலையில் இருந்து வெளியே வராத காங். - பிரதமர் மோடி

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

அது எந்த விலங்கு என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மனிதனுக்கு வந்தவுடன் மனிதனிலிருந்து சில விலங்குகளுக்கு பரவுவதை நாம் பார்க்கிறோம். உதாரணமாக நியூயார்க்கில் உயிரியல் பூங்காவில் சில விலங்குகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டன.

வண்டலூர்

வண்டலூர்

அது போல் சென்னையில் வண்டலூர் பூங்காவில் சில சிங்கங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இரு சிங்கங்கள் இறந்தன. ஐரோப்பாவில் டென்மார்க், போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கீரி (MINK) வகையான விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

விலங்குகள்

விலங்குகள்

மனிதர்களிடமிருந்துதான் விலங்குகளுக்கும் இந்த தொற்று ஏற்பட்டது. வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்போரின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இருந்தால் அது இந்த செல்லப்பிராணிகளுக்கும் பரவுமா என்றால் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

கொரோனா

கொரோனா

ஏனெனில் நாய்களுக்கு கொரோனா வருகிறது. நாய்களை காட்டிலும் பூனைகளுக்கு அதிகளவில் கொரோனா தொற்று ஏற்படுகிறது. இந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்றால் வீட்டில் யாருக்கேனும் கொரோனா தொற்று இருந்தால் செல்லப்பிராணிகளை தனிமைப்படுத்த வேண்டும்.

கொரோனா நோய்

கொரோனா நோய்

கொரோனா பாதித்தவர் நோயிலிருந்து விடுபட்டவுடன் செல்லப்பிராணிகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம். ஒரு வேளை அந்த செல்லப்பிராணிகளுக்கும் கொரோனா தொற்று வந்துவிட்டால் அப்போதும் அதை தனிமைப்படுத்த வேண்டும். அதற்கென தனி இடம் கொடுத்து ஒரு அறையிலோ வீட்டின் வெளிப்புறமோ தங்க வைக்க வேண்டும்.

கழிவுகள் சுத்தம்

அது தங்கியிருக்கும் இடத்தை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் கழிவுகளையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். கழிவுகளை வெளியேற்றும் போது கிருமிநாசினி தெளித்து வெளியேற்ற வேண்டும். கொரோனா பாதித்த செல்லப்பிராணிகளை கவனிப்பவர்கள் ஏற்கெனவே தடுப்பூசி போட்டிருந்தால் சிறந்தது.

கிளவுஸ்

கிளவுஸ்

அந்த நபர் மாஸ்க் அணிந்து கொண்டு கையில் கிளவுஸ் போட்டு கொண்டுதான் விலங்குகளை பராமரிக்க வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு மாஸ்க் போடக் கூடாது. அது போல் ஹைட்ரஜன் பெராக்ஸைடு, டெட்டால், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை அந்த விலங்குகள் மீது தெளிக்கக் கூடாது. அது ஆபத்தை ஏற்படுத்தும்.

விலங்குகள்

விலங்குகள்

செல்ல பிராணிகளை கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். அதற்கும் மனிதர்களுக்கு எடுப்பது போல் மூக்கு, தொண்டை பகுதிகளிலிருந்து சளி மாதிரி எடுத்து கொரோனா சோதனை செய்வார்கள். கொரோனா வந்தால் சில விலங்குகளுக்கு அறிகுறி இருக்காது, சில விலங்குகளுக்கு அறிகுறி இருக்கும்.

காய்ச்சல்

காய்ச்சல்

காய்ச்சல், மூக்கில் சளி ஒழுகுதல், சோர்ந்து போதல், பசியில்லாமல் இருத்தல், ஆக்டிவ்வாக இல்லாமல் ஒரே இடத்தில் படுத்து கிடக்கும். இதெல்லாம் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும். கொரோனா தொற்று வந்த விலங்குகளை தனிமைப்படுத்திய பின்னர் 14 நாட்கள் கழித்து வீட்டிற்கு கொண்டு வரலாம் அல்லது ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துவிட்டு நெகட்டிவ் வந்தவுடன் கொண்டு வரலாம்.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் National Institute of High Security Animal Diseases,
(NIHSAD தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் (என்ஐஎசட்)) என்ற பரிசோதனை கூடம் உள்ளது. விலங்குகளிடம் சேகரிக்கப்படும் கொரோனா சேம்பிள்கள் இந்த மையத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

English summary
Professor Dr Muthu Chella kumar says about how to protect pet animals from Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X