கெட்டு போன சிக்கனால் ஏற்படும் அறிகுறிகள் என்ன? இறைச்சி கெட்டதை கண்டுபிடிப்பது எப்படி? டாக்டர் தீபா
சென்னை: கெட்டு போன சிக்கன் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அறிகுறிகள் என்ன, எத்தனை மணி நேரத்தில் மருத்துவரை அணுகினால் உயிரிழப்பை தடுக்க முடியும் என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆரணியில் சிக்கன் சாப்பிட்டு சிறுமி பலி, தந்தூரி சிக்கன் சாப்பிட்டு மாணவன் பலியான சம்பவம், கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி பலியான சம்பவம் என செய்திகள் வெளியானதை பார்த்துள்ளோம்.
இதனால் சிக்கன் சாப்பிட்டதால்தான் இவர்கள் இறந்தனர் என கருதக் கூடாது. சிக்கனை எப்படி சமைக்கிறோம். எப்படி பாதுகாக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. சிக்கன் என்பது அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய ஒரு உணவாகும். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் அசைவ உணவுகளை பரிந்துரைப்பது இல்லை என்ற போதிலும் சிக்கனில் நிறைய புரத சத்து இருப்பதால் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது குறித்து சொல்கிறேன்.

கறி கடையில்
பொதுவாக சிக்கனை வாங்கும் போது கறி கடையில் நம் கண் முன் வெட்டி தருவார்கள். அதை வாங்கிக் கொண்டு வந்து சமைக்கிறோம். சிக்கனை காலையில் வாங்கி வந்தவுடன் அதை மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு போட்டு கழுவி எடுத்து பிரிட்ஜில் 4 டிகிரி வெப்பநிலையில் வைக்க வேண்டும். அதை வைக்கும் போது அந்த சிக்கனில் இருந்து கசியும் ஜூஸ்கள் அங்கேயே தங்காமல் வெளியேறிவிட வேண்டும்.

பதப்படுத்தும் கவர்களில் துளை
இதற்காக நாம் பதப்படுத்தும் கவர்களில் துளை இருக்க வேண்டும். அந்த ஜூஸ்கள் வந்தால்தான் நல்லது. அப்போதுதான் சிக்கன் கெடாது. அதற்காக அவை மற்ற உணவு பொருட்களையும் நாசப்படுத்திவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருத்தல் வேண்டும். சிக்கனை எடுத்து வைத்து சமைப்பதற்கு முன்பு நாம் கட்டாயம் பார்க்க வேண்டியது, அதன் மேல் பச்சை நிறத்திலோ இல்லை சாம்பல் நிறத்திலோ ஏதேனும் படிந்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

சிக்கன்
மசாலா போட்டு சிக்கனை மேரிக்னேட் செய்திருந்தாலும் பாக்டீரியாவின் வளர்ச்சி என்பது இருக்கும். ஒரு வேளை அது போல் ஏதேனும் படிந்திருந்தால் அது கெட்டு போனதற்கான அறிகுறியாகும். மேலும் பச்சை கறி சிக்கனாக இருந்தாலும் சமைத்ததாக இருந்தாலும் கெட்டு போய்விட்டால் அதிலிருந்து இருந்து அசிட்டிக் வாடை வீசும் அல்லது அமோனியா வாடை வீசும். மசாலா போட்டு வைத்தாலும் இந்த வாடை வரும்.

நார்சத்துகள்
சிக்கனை கழுவும் போதே அதன் நார்சத்துகள் இழந்து கொழ கொழப்பு தன்மை இருக்கும். அதிலிருந்து சிக்கன் கெட்டு போனது என தெரிந்து கொள்ளலாம். ஒரு வேளை கெட்டு போன சிக்கனை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். கெட்டு போன உணவை சாப்பிட்டால் ஏற்படக் கூடிய நோய்க்கு food borne disease என சொல்வார்கள்.

இறப்பு வருமா
கெட்டு போன சிக்கனை சாப்பிட்ட உடனே இறப்பு வருமா என்றால் இல்லை. இந்த பாக்டீரியா நம் உடலில் போய் அதன் வேலைகளை செய்வதற்கான காலம் என்பது 4 முதல் 6 மணி நேரம் ஆகும். கெட்டு போன சிக்கனில் உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் பெயர் கம்பைலோ பாக்டர் (Campylobacter).

சமைக்காத சிக்கன்
சமைக்காத சிக்கன், அரை குறையாக சமைத்த சிக்கன், ஏற்கெனவே சமைத்த சிக்கனை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துதல் ஆகியவற்றின் போது இந்த கம்பைலோ பாக்டர் எனும் பாக்டீரியா கழிவுகளை வெளியே தள்ளும். அப்போது அந்த உணவு நச்சுத்தன்மையை அடையும். சாப்பிடும் போதே உடம்பு ஜில்லென ஆகிவிடும். இல்லாவிட்டால் காய்ச்சலை போல் அதிக வெப்பத்தை கொடுக்கும். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவையும் இருக்கும். இதனால் சிலருக்கு உடனே நீர் சத்து குறைந்துவிடும்.

கெட்டு போன உணவு
இந்த கெட்டு போன உணவால் ஏற்படும் மிக மோசமான அறிகுறி எது என்றால் ரத்தத்துடன் மலம் வெளியேறுதல்தான். இதை பார்க்கும் போது நிறைய பேர் சிக்கன் சாப்பிட்டதால் சூடாகிவிட்டதாக நினைத்து இந்த அறிகுறியை அலட்சியமாக விட்டுவிடுவார்கள், இது மிகவும் தீவிரமாக உணவு நச்சுத்தன்மை என்பதற்கான அறிகுறியாகும். உடனே நாம் மருத்துவமனைக்கு சென்று உணவு நச்சுக்கு எதிராக சிகிச்சை கொடுக்கும் போது உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ளலாம்.

பாக்டீரியா தொற்று
மற்ற நாடுகளை போல் நாமும் சிக்கனை ஏன் ப்ரீசரில் வைத்து பயன்படுத்த வேண்டும்? அவர்களுடைய சீதோஷ்ண நிலை வேறு, நம்முடைய நாட்டின் சீதோஷ்ண நிலை வேறு. அது போல் சிக்கனை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிட்டு வந்தால் அது பாக்டீரியா தொற்றை அதிகரித்து கொண்டே இருக்கும். ஷவர்மாவை பொருத்தமட்டில் அது ஏன் உயிரிழப்பை ஏற்படுத்தியது என பார்க்க வேண்டும். ஒன்று சிக்கன் கெட்டு போயிருக்கும். இன்னொன்று மயனஸில் கலக்கப்படும் முட்டை - இவை இரண்டுமே அதிக அளவு பாக்டீரியா வளர்ச்சியை தூண்டக் கூடியதாகும்.

என்ன அறிகுறிகள்
உணவு நச்சுத்தன்மையானது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடும். குடல் அழுகிமூச்சுவிடும் போது அழுகிய வாடை அடிக்கும். அது போல் வயிறு வலி அதிகமாக இருக்கும். இப்படி ஆகும்போது அஜாக்கிரதையாக இருந்தால் அது ஆபத்தில் முடியும். உணவு நச்சுத்தன்மையாகிவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். முதலில் வாந்தி எடுத்துவிட வேண்டும். உடனே போய் படுத்து தூங்க கூடாது. எனிமா கொடுத்து வயிற்றை கிளீன் செய்ய வேண்டும். நீர் சத்து குறைய விடாமல் தடுக்க எலக்ட்ரோலைட் குடிக்க வேண்டும். ஆனால் இதை மருத்துவரின் பரிந்துரையில்தான் செய்ய வேண்டும். இது போல் செய்வதால் உயிரிழப்பை தடுத்து உணவு நச்சுத்தன்மைக்கு சிகிச்சை கொடுக்கலாம். இதை கவனிக்காமல் விட்டால்தான் பிரச்சினை. இவ்வாறு மருத்துவர் தீபா தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications