கவலைகளா?.. தூக்கமின்மையா?.. இந்த ஆசனத்தை செய்ங்க!.. அப்பறம் பாருங்க.. சொல்கிறார் டாக்டர் தீபா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கழுத்து வலி, இடுப்பு வலி, தண்டுவட பிரச்சினைகள் தீர ஆசனங்களின் தாயான தாடாசனத்தை செய்து பழகுங்கள் என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை கைநுட்ப மருத்துவத் துறை டாக்டர் ஒய் தீபா சொல்கிறார்.

Recommended Video

    Health Tips : உடல் அசதி, உடல் வலி, தலை வலியா? | Dr Y Deepa explains

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் இந்த கொரோனா நேரத்தில் ஆசனங்கள் மூலம் நாம் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்பதுகுறித்து பார்ப்போம். முதலில் நாம் பார்க்கயிருப்பது தாடாசனம். மலை போல் நிற்பது (mountain pose) ஆகும். இதை ஆசனங்களின் தாய் (mother of all asanas) என்பார்கள்.

    பொருளாதாரம்

    பொருளாதாரம்

    தாய் போல் இருக்கும் இந்த ஆசனங்கள் நம் உடலில் மிகப்பெரிய மாற்றங்களை தருகிறது.இந்த தாடாசனம், ஒரு மலை எப்படி இருக்குமோ அதுபோல் இரு கைகளை குவித்து செய்ய வேண்டும். நாம் ஃபோகஸ்ட்டாக இருக்க இது உதவும். இந்த கொரோனா நேரத்தில் நமக்கு அதிகமாக சிந்தனைகள் இருந்து கொண்டே இருக்கிறது. அதாவது நமது வாழ்வாதாரம் என்னவாகும். பொருளாதாரம் என்னவாகும்.

    எதிர்காலம்

    எதிர்காலம்

    நாளைக்கு என்ன நடக்கும், குழந்தைகளின் எதிர்காலம்,படிப்பு என பல சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்கிறது. நாம் ஃபோகஸ்ட்டாக நம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. இந்த தாடாசனம் செய்யும் போது மனம் ஒருநிலைப்படுகிறது. இந்த ஆசனத்தில் நாம் பேலன்ஸ்டாக இருக்க வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நம் பார்வையை வைக்க வேண்டும்.

    சுவாசம்

    சுவாசம்

    அப்போது ஆடாமல் பேலன்ஸ்டு ஆக இருக்க இது உதவும். இதை செய்யும் போது உயர் ரத்த கொதிப்பை குறைக்கும். நாம் இந்த ஆசனத்தை நேராக நின்று செய்யும்போது தண்டுவடத்தில் உள்ள நரம்புகள் எல்லாம் அலர்ட்டாக இருக்கும். நாம் பதற்றமாகவும் மன அழுத்தத்தில் இருக்கும் போது நமது சுவாசம் மிகவும் மேலோட்டமாகவும் வேகமாகவும் இருக்கும்.

    அலர்ட்

    அலர்ட்

    தண்டுவடத்தை நன்றாக ஸ்ட்ரெட்ச் செய்து செய்யும் போது நம் மனதை அலர்ட் செய்கிறது. பாராசிம்பதட்டிக் நரம்புகளை தூண்டிவிட்டு நமது மனதை கட்டுக்குள் வைக்கிறது. நேர்மறை எண்ணத்தை அதிகரிக்க இது உதவுகிறது. கழுத்து வலி, இடுப்பு வலி, தண்டுவடம் தொடர்பான பிரச்சினைகளை நீக்கி தண்டுவடத்தை பலப்படுத்தும். தூக்கத்தையும் சீராக்கும். நுரையீரலின் திறனை அதிகரிக்கும் என்றார் டாக்டர் தீபா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+