கல்விக் கண்ணை திறப்பதுதான் திராவிட மாடல் அரசின் பெரும் பணி.. மோடி முன்னிலையில் ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழர்கள் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்கள் என்றும் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி இதனை தெரிவித்தார்.
Recommended Video
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 42வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி , முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டரும் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்று தொடக்கி வைத்த பிரதமர் மோடிக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்ஐஆர்எப் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. உயர்கல்வியில் மேன்மை பெற்ற தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் பிரதமரை வரவேற்கிறேன். கையில் பட்டத்துடனும் கண்களில் கனவுகளுடனும் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
காஞ்சியில் பிறந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அமர்ந்த பட்டமளிப்பு விழா என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், அண்ணாவின் பேச்சினை மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். உறுதியுடன் செல்வீர் ஊக்கமுடன் பணிபுரிவீர், ஏற்றமிகு வெற்றிகளை ஈட்டுவீர் என்று அண்ணா சொன்னதை உங்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்
இந்த பட்டங்கள் பெறுவதோடு உங்கள் படிப்பு முடிந்து விடுவதில்லை. அந்த பட்டங்களை நோக்கி உயருங்கள். பட்டங்கள் என்பவை வேலை வாய்ப்புக்காக மட்டுமல்ல உங்கள் அறிவாற்றலை மேம்படுத்தும். உங்களுடைய பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திரமோடி முதன்மை விருந்தினராக வந்துள்ளார். இது உங்களுக்கு எல்லாம் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை. நான் பட்டம் வாங்கும் போது பிரதமரே வந்திருந்தார் என்று உங்கள் எதிர்கால பிள்ளைகளிடம் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.
இத்தகையாக பெருமைகளோடு எதிர்காலத்திற்குள் நுழைகிறீர்கள். அறிவாற்றல்தான் அனைத்திலும் வலிமையானது. எத்தனையோ பல விசயங்கள் ஆளுக்கு நாள் நேரத்திற்கு நேரம் மாறினாலும் அறிவு மட்டும் ஒரே மாதிரியாக ஒரே அளவு கோலில்அளவிடப்படுகிறது.
தமிழர்கள் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கக் கூடியவர்கள். கடல் வணிகம், கடற்படை, இரும்பு வார்க்கும் தொழில் நுட்பம், கல்லணை, தஞ்சை பெரியகோவில் என வரலாற்றில் நிலைத்திருக்கும் பல படைப்புகளை தனது தொழில் நுட்ப அறிவால் எல்லோருக்கும் முன்னோடியாக தமிழன் படைத்திருக்கிறான்.
கல்வி என்பதுதான் யாராலும் திருடமுடியாத பறிக்க முடியாத சொத்து. அதனால்தான் படிப்புக்கு மட்டும் எத்தகைய தடைக்கல்லும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். அதனால்தான் இன்றைய திராவிட மாடல் தமிழக அரசானது கல்விக்கண்ணை திறப்பதையே பெரும்பணியாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
திராவிட இயக்கத்தின் முழுமுதற்கொள்கையான சமூகநீதி அடிப்படை என்பதே கல்விதான். அனைவரும் படிக்க வேண்டும். அனைவரும் வேலை வாய்ப்பு பெற வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது. அதற்காகவே சமூக நீதி கருத்தியலும் தோன்றியது. அனைவருக்கும் கல்வி..அனைவருக்கும் உயர்கல்வி.. அனைவருக்கும் கல்லூரிக்கல்வி..அனைவருக்கும் ஆராய்ச்சிக்கல்வி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் பட்டியலிட்டார். இல்லம் தேடி கல்வி முதல் மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் வரை ஏராளமான திட்டங்கள் மூலம் கல்விப்புரட்சியை நிகழ்த்தி வருகிறோம் என்றார்.
உங்களிடம் இருந்து தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே எதிர்பார்க்கிறது. இன்று முதல் நீங்கள் பட்டதாரிகள் மட்டுமல்ல நல்லெண்ண தூதுவர்களும் நீங்கள்தான் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications