"தவறான முடிவு திருத்தப்பட வேண்டும்".. கனவு திட்டமான பரந்தூர் ஏர்போர்ட் கைவிடல்.. அப்போ ரூ.680 கோடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு கைவிடுவதாக அறிவித்த நிலையில், இதற்கான அரசாணை எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.680 கோடி அரசு பணம் செலவிடப்பட்டுள்ளதால், திட்டத்தை பாதியில் கைவிடுவது எப்படி என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு, திட்டத்தை கைவிடுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள் நெரிசலைக் குறைக்க, சுமார் ரூ.27,000 கோடி செலவில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 1,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ரூ.680 கோடி செலவிடப்பட்டு, 48 சதவீத நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.

Parandur Airport chennai highcourt Parandur Airport Cancellation Vijay Government

பரந்தூர் விமான நிலைய திட்டம்

ஆனால், விமான நிலையத்துக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்துத்தான் தற்போது சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்ட தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு இன்று நவம்பர் 20 விசாரணைக்கு வருகிறது. சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் கவுதமன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், திட்டத்தை கைவிடும் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ரூ.27,000 கோடியில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ரூ.680 கோடி செலவிடப்பட்டு, 48 சதவீத நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளன. பன்னூர், திருப்போரூர், படாளம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்த பிறகே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

மொத்தம் 2,325 ஹெக்டேர் நிலத்தில் விமான நிலையம் அமைக்க 1,527 ஹெக்டேர் தனியார் நிலத்தை கையகப்படுத்தவும், 798 ஹெக்டேர் அரசு நிலத்தை வகை மாற்றம் செய்யவும் 2023ல் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், தொழில்நுட்ப விவரங்கள், நிபுணர் குழு அறிக்கைகள், பொருளாதார ஆய்வுகள் எதுவும் இல்லாமல் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, திட்டத்தை கைவிடுவது தொடர்பாக முதலமைச்சர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கக் கூடாது என்றும் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

இன்று விசாரணை

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.. இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், பரந்தூரில் நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் அதிகம் இருப்பதால் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்தார்.

மேலும், தவறான முடிவுகள் திருத்தப்பட வேண்டும் என்றும், விமான நிலைய திட்டத்தை கைவிடுவது அரசின் கொள்கை முடிவு என்றும் கூறினார். இதற்கான அரசாணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் வெளியிடப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழக அரசு மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவை மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர். இதனால், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதற்கான அரசாணை எப்போது வெளியாகும், ஏற்கெனவே செலவிடப்பட்ட ரூ.680 கோடி தொடர்பாக அரசு என்ன விளக்கம் அளிக்கப்போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+