சளைக்காத ஏசிஎஸ்.. படை பலத்துடன் களம் குதித்த துரைமுருகன்.. ரெய்டு வராமல் இருந்தால் சரித்தான்!
மகனின் வெற்றிக்காக துரைமுருகன் வியூகங்களை அமைத்து வருகிறார்
Recommended Video
சென்னை: வேலூர் தொகுதியில் ஆரம்பமே அசத்தலாக உள்ளது.. அதிமுக - திமுக தரப்பினர் கள வேலைகளில் இறங்கி விட்டனர். அதிலும் துரைமுருகன் ஒரு படி மேலே போய்விட்டார்!
எப்படா வேலூருக்கு தேர்தல் வரும் என்று திமுக, அதிமுகவும் காத்து கிடந்தன. நின்று போன தேர்தலில் துரைமுருகன் எந்த அளவுக்கு மன ரீதியாக பாதிக்கப்பட்டாரோ, அதே அளவுக்குதான் ஏசி சண்முகமும் பாதிக்கப்பட்டார்.
துரைமுருகன் உடல்நலம் சரியில்லாமல் போகும் நிலைகூட ஏற்பட்டது என்றால், ஏசி சண்முகம் கதறி கதறி அழும் நிலையும் ஏற்பட்டது.

ஏசிஎஸ் = பூரிப்பு
ஆனால் இப்போது இரு தரப்புமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏசி சண்முகம் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.. தேர்தல் நடக்க போகிறது என்ற சந்தோஷம்தான் அவர் முகத்தில் தென்பட்டதுபோல இருந்தது. போன வாரமே கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆறுதல் கேட்க ஆரம்பித்துவிட்டார் ஏசி சண்முகம். "விட்டதை" பிடிக்க படு சுறுசுறுப்பாகி விட்டார்.

பொறுப்பாளர்கள்
எனினும் திமுக தரப்பில் தேர்தல் அறிவித்த உடனே தேர்தல் பொறுப்பாளர்களை திமுக அறிவித்து தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். இதில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர்களான ஆர்.காந்தி, நந்தகுமார், முத்தமிழ்செல்வி மற்றும் டிஆர் பாலு, ஜெகத்ரட்சகன் உட்பட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர சட்டமன்ற பொறுப்பாளர்களும், பணிப்பொறுப்பாளர்களாக முன்னதாகவே நியமிக்கப்பட்டு விட்டனர்.

கதிர் ஆனந்த்
அடுத்ததாக, துரைமுருகன் தன் மகன் கதிர் ஆனந்திற்காக வேலூரிலேயே முகாம் அமைத்து விட்டாராம். இதை தவிர, வேலூர் தொகுதியை பொறுத்தவரை சிறுபான்மையினர் வாக்குகள் குறிப்பிட்டு சொல்லும்படியாக உள்ளது. அதனால் முஸ்லிம் பிரமுகர்களையும் சந்திக்க ஆரம்பித்து விட்டாராம் துரைமுருகன்.

அனல் பறக்கிறது
எல்லாவற்றிற்கும் மேலாக திமுக நிர்வாகிகளை அழைத்து, முழுவீச்சில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆக மொத்தம், ஏசி சண்முகம் ஒரு பக்கமும், துரைமுருகன் ஒரு பக்கமும் வேலூர் தொகுதியில் தங்கள் களவேலைகளால் இப்பவே அதிர வைத்து கொண்டிருக்கிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications