சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடாமல் டெல்லியில் முகாம்.. அமைச்சர் பதவிக்காக ஓபிஎஸ் தரப்பு தொடர் முயற்சி?

மகனுக்கு அமைச்சர் பதவி வாங்க டெல்லியிலேயே ஓபிஎஸ் முகாமிட்டுள்ளாராம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi cabinet ministry | வைத்திலிங்கம், ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் பதவி இல்லை

    டெல்லி: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    அமைச்சர் பதவிக்காக அவர்கள் முகாமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாஜக தரப்பில் சாதகமான பதில் கிடைக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

    லோக்சபா தேர்தலில் தமிழகத்திலிருந்து அதிமுக கூட்டணியில் ரவீந்திரநாத் குமார் மட்டுமே தேனியில் சிறப்பான வெற்றியைப் பெற்றார். மற்ற அனைவருமே மண்ணைக் கவ்வி விட்டனர். இதனால் ரவீந்திரநாத் குமாருக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

    டெல்லி மந்தையில் சந்தி சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ் கோஷ்டி சண்டை.. மத்திய அமைச்சர் பதவி அம்போ! டெல்லி மந்தையில் சந்தி சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ் கோஷ்டி சண்டை.. மத்திய அமைச்சர் பதவி அம்போ!

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    அதேசமயம், பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பாஜகவும் அறிவித்தது. இதனால் கண்டிப்பாக அது ரவீந்திரநாத் குமாருக்கே என்று ஓபிஎஸ் தரப்பு பெரும் நம்பிக்கையில் இருந்து வந்தது. ஆனால் திடீரென வைத்தியலிங்கம் ரூபத்தில் குழப்பம் எழுந்தது.

    ஜூனியர்

    ஜூனியர்

    சீனியரான எனக்கே அமைச்சர் பதவி தர வேண்டும் என்று வைத்தியலிங்கம் போர்க்கொடி உயர்த்த அவருக்கு பல சீனியர்களும், ஓபிஎஸ் எதிர்ப்பாளர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் பாஜக தரப்பு குழப்பமடைந்தது. இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயற்சிகள் நடந்தன. ஆனால் இருவருமே பிடிவாதமாக இருந்தனர்.

    பதவி இல்லை

    பதவி இல்லை

    சீனியரை விட்டு விட்டு ஜூனியருக்கு கொடுத்தால் அதிமுகவில் பிரச்சினை வெடிக்கும். புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் அதிமுகவில் பிரச்சினை வெடிப்பதை பாஜக விரும்பவில்லை. இதனால் இருவருக்குமே பதவி கிடையாது என்று கூறி விட்டது.

    ரவீந்திரநாத் குமார்

    ரவீந்திரநாத் குமார்

    இதனால் அதிமுகவின் சீனியர் தரப்பு நிம்மதி அடைந்துள்ளதாம். டெல்லிக்குப் போன அத்தனை பேரும் திருப்திகரமாக ஊர் திரும்பி விட்டனராம். ஆனால் ஓபிஎஸ் தரப்பு மட்டும் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ரவீந்திரநாத் குமாருக்கு எப்படியாவது பதவி வாங்கி விட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

    சாத்தியமா?

    சாத்தியமா?

    அதற்கு பாஜக என்ன பதிலளிக்கப் போகிறது என்று தெரியவில்லை. அதேசமயம், இப்போதுதான் அமைச்சரவை பதவியேற்பு முடிந்துள்ளதால், உடனடி வாய்ப்புக்கும் சாத்தியமில்லை. அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில்தான் ரவீந்திரநாத் குறித்து பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    O Panneerselvam is said to have stayed in Delhi for his son's Cabinet Posting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X