சென்னை வேளச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வேளச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் அசன் மௌலானா. இவர் அந்த தேர்தலில் செய்த செலவு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு காட்டினார்.

congress tamil nadu

அதில் அவர் முறையாக கணக்கு காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. அதாவது ரூ. 37 லட்சம் தேர்தலுக்கு செலவு செய்த நிலையில் 17.03 லட்சம் மட்டுமே செலவிட்டதாக கணக்கு காட்டினாராம். இதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துவிட்டது.

நாளிதழ்களில் வெளியான விளம்பரச் செலவுகளை காங்கிரஸ் கமிட்டி ஏற்றதாக கூறி கணக்கு காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து அசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் வேளச்சேரி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா, அதிமுக சார்பில் எம்.கே.அசோக், நாதக சார்பில் கீர்த்தனா, தவெக சார்பில் குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தவெக வேட்பாளர் குமார் வெற்றி பெற்றிருந்தார்.

அசன் மௌலானா, கடந்த 2016ஆம் ஆண்டு அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் தேனி முன்னாள் எம்எல்ஏ ஹாருன் ரஷீத்தின் மகனாவார். இவர் வேளச்சேரி தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்ற போது அந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் திமுகவும் வேளச்சேரி அசனுக்கு சீட் கொடுப்பதென்றால் அந்த தொகுதியை தரமாட்டோம் என சொன்னதாகவும் தகவல்கள் கிடைத்தன. ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தலில் அசன் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+