2,600 பேரால் எதுவும் செய்ய முடியாது.. ஓபிஎஸ் பலமே வேறு.. பாருங்க.. சூசகமாக பேசிய வைத்திலிங்கம்!
சென்னை: ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை, பொதுக்குழு உறுப்பினரால் எதுவும் செய்ய முடியாது என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் நாளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை தீர்ப்பளிக்க உள்ளார். நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வரவுள்ள நிலையில், பொதுக்குழு நடக்குமா, நடக்காதா என்று கேள்வி எழுந்துள்ளது.
பெரும்பாலும் பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்படி பொதுக்குழுவை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதே தீர்ப்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதியும் அளிக்க வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக வரவில்லை என்றால், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில், நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், நீதிமன்றம் தீர்ப்பு காலை 9 மணிக்கு வரும். நீதிமன்ற தீர்ப்பை மதிப்போம். அதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி சொல்லப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக பொதுக்குழு ஏற்பாட்டில் ஓபிஎஸ் படம் இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு, இப்போதும் ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர். எதிர்காலத்திலும் அவர் தான் ஒருங்கிணைப்பாளர் என்று தெரிவித்தார். ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டுள்ள இயக்கம் அதிமுக. அந்தத் தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேரால் எதுவும் செய்ய முடியாது. ஒன்றைரை கோடி தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications