ஒரே பாயிண்ட்டில் ஆஃப்.. ‘எக்ஸ்பெர்ட்' சொன்ன விஷயத்தால் எடப்பாடி ஹேப்பி.. ஓபிஎஸ் பிளானுக்கு ‘செக்’!
சென்னை : அடுத்தகட்ட திட்டத்தில் இறங்கியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மூத்த சட்ட வல்லுநர்கள் கூறியுள்ள ஒரு முக்கியமான 'பாயிண்ட்' உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறதாம்.
உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து, முக்கிய சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அடுத்தகட்டமாக, பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, ஏகமனதாக தன்னைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பணிகளை ஈபிஎஸ் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதுதொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, அவருக்கு சட்ட ஆலோசனை வழங்கும் குழுவினர் ஒரு நம்பிக்கையான பாயிண்டைக் கூறியுள்ளனராம்.

நெக்ஸ்ட் மூவ்
உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வெற்றியைக் கொடுத்த நிலையில், அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்ல இருக்கிறார் ஓபிஎஸ். இன்றோ நாளையோ ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய இருக்கிறது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி நேற்று, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். அதிமுக விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பையும் கேட்க வேண்டும் என முறையிட்டுள்ளார் ஈபிஎஸ்.

வேறொரு திசையில் அட்டாக்
இது ஒருபுறமிருக்க, கட்சியை தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் முடிவுக்கு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பின்னடைவைச் சந்தித்துள்ள நேரத்தில், இன்னொரு திசையில் இந்த அட்டாக்கை தொடுக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுச் செயலாளர் ஆகும் ஈபிஎஸ்
ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நான்கு மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த முடிவுசெய்யப்பட்டிருந்தது. விரைவில் அந்தத் தேர்தலை நடத்தி, இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆக திட்டமிட்டுள்ளார். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாசெக்கள் வழிமொழியவும், 10 மாசெக்கள் முன்மொழியவும் வேண்டும் என்பதால், வேறு எவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முட்டுக்கட்டை போட பிளான்
எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த திட்டமிட்டால், அதற்கு எதிராக வழக்கு தொடுப்பதற்காக ஓபிஎஸ் தனது தரப்பு வழக்கறிஞர்களிடம் பேசி வந்தார். தேர்தலை நடத்தினால், ஈபிஎஸ் தரப்பு இன்னும் வலுவாகும், எனவே, ஈபிஎஸ் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் உடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்தவகையில், பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் ஜனநாயக முறையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி வழக்கு தொடர ஓபிஎஸ் அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செக் வைக்கும் எடப்பாடி
இந்தத் தகவல் எடப்பாடி பழனிசாமி காதுக்கும் சென்றுள்ளது. தற்போதைய சூழலில் ஓபிஎஸ்ஸுக்கு நிலவும் நெருக்கடிகளை பயன்படுத்தி நாம் ஒரு கணக்குப் போட்டால், அதற்கும் தடை பெற ஓபிஎஸ் முயற்சிப்பது எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதையடுத்து, மூத்த சட்ட நிபுணர்களிடம், இந்தப் பிரச்சனை குறித்து விவாதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்த விவகாரத்தில் நம் தரப்பு வலுவாக இருக்க என்ன செய்ய வேண்டும், இப்போது இந்த மூவ் செய்வது சரிதானா என்பது பற்றி கேட்டுள்ளார்.

தாராளமா நடத்தலாம்
ஏற்கனவே அவசரமாகச் செயல்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக நிதானமாகச் செல்லவே ஈபிஎஸ் விரும்புகிறாராம். இதுதொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூறிய வழக்கறிஞர்கள், தேர்தல் நடத்துவதற்கான வேலைகளில் நீங்கள் தாராளமாக ஈடுபடலாம் என்றும் பரிந்துரைத்துள்ளனர். பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஓ.பன்னீர்செல்வம் இப்போது கட்சியிலேயே இல்லை. அவரது அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டுவிட்டது.

உறுப்பினராகவே இல்லையே
அந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியால், ஓபிஎஸ் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களும் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே, கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர, கட்சியின் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு முகாந்திரம் இல்லை என்ற பாயிண்ட்டை நாம் முன்வைக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளனராம்.

முக்கியமான பாயிண்ட்
கட்சியின் உறுப்பினராகவே இல்லாதவர்கள், உட்கட்சித் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால், அது கோர்ட்டில் நிற்காது, நாம் செய்ய வேண்டியது எல்லாம், அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்போகும் மேல்முறையீட்டு வழக்கில், அவர்களுக்குச் சாதகமாக முடிவு வந்துவிடக்கூடாது என்பதை ஒட்டித்தான். இது நடந்தாலே போதும், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என நம்பிக்கையோடு தெரிவித்துள்ளனராம். இது ஈபிஎஸ்ஸுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறதாம்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications