எடப்பாடி சைலண்ட்டா காரியத்தை சாதிக்கிறாரே.. அடுத்தடுத்து ரகசிய மீட்டிங்? திமுக அஸ்திவாரம் ஆடுதா?
சென்னை: தமிழக அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கவனம் பெற தொடங்கி உள்ளார். வரிசையாக 11 தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் கூட தற்போது நம்பிக்கையாக 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக தொடங்கி உள்ளார். இதற்காக அவர் சில சீக்ரெட் மீட்டிங்குகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார். சமீபத்தில் கூட சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்.

2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று அமித் ஷா கூறி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சில சீக்ரெட் மீட்டிங்குகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.
அரசியல் மீட்டிங்குகள்
பொதுவாக அரசியலில் இன்ப்ளூயன்ஸ் செய்ய சிலர் இருப்பார்கள். அரசியல் வியூகம் வகுப்பவர்கள், சில பிரிவினரை ஒரு தலைவருக்கு கீழ் கொண்டு வருபவர்கள், ஒரு அரசியல் தலைவருக்கு ஆதரவாக களத்தை மாற்றுபவர்கள் என்று அரசியல் களத்தில்
இன்ப்ளூயன்ஸ் செய்ய பலர் இருக்கிறார்கள்.
அரசியல் விமர்சகர்கள் தாண்டி.. விமர்சனம் செய்யாமல் உள்ளே களத்தில் இருந்து மட்டும் பணிகளை செய்ய கூடியவர்கள் இப்படி பலர் உள்ளனர். இப்படி சிலரைத்தான் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க தொடங்கி உள்ளார். முதல் கட்டமாக சமீபத்தில் இதேபோன்ற பின்னணி கொண்ட ஒருவரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து உள்ளார்.
அடுத்த கட்டமாக இன்னும் 2-3 பேரை இப்படி எடப்பாடி பழனிசாமி நேரடியாக, ரகசியமாக சந்திக்க உள்ளார். தனக்கு ஏற்றபடி அரசியல் சூழலை மாற்றுவதற்கு வசதியாக எடப்பாடி பழனிசாமி ஏற்பாடுகளை செய்து வருகிறார். தனக்கு ஆதரவாக கருத்து கொண்டு வருவதற்கான மூவ்களையும் எடப்பாடி பழனிசாமி செய்வார் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி எடுக்க போகும் சர்வே
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை தேர்தலுக்காக கட்சி ரீதியாக சர்வே எடுக்க உள்ளாராம். பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து எடப்பாடி இந்த சர்வேவை எடுக்க உள்ளாராம். அதன்படி அதிமுகவிற்கு கூட்டணி இல்லாமல் எவ்வளவு வெற்றி வாய்ப்பு இருந்தது. பாஜக கூட்டணியோடு எவ்வளவு வெற்றி வாய்ப்பு உள்ளது.
பாஜக மூலம் எத்தனை வாக்குகள் அதிமுகவை நோக்கி வருகின்றன வெளியே செல்கின்றன. முதலமைச்சர் முகங்களில் யாருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. விஜயால் அதிமுகவிற்கு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? திமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து உள்ளதா சரிந்து உள்ளதா?ஆட்சிக்கு ஆதரவான எதிரான மனநிலைகள் உள்ளதா? அதிமுக எந்தெந்த மண்டலங்களில் வலுவாக உள்ளது. எந்தெந்த மண்டலங்களில் வலிமை இன்றி உள்ளது என்று பல விஷயங்களை எடப்பாடி பழனிசாமி சர்வே மூலம் அறிய உள்ளாராம். இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் எடப்பாடி ஒப்பந்தம் செய்ய உள்ளாராம்.
-
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications