அதிமுக அலுவலக சாவி.. ஓபிஎஸ்ஸுக்கு ட்விஸ்ட் வைத்த எடப்பாடி பழனிசாமி.. அதிகாலையில் பரபரத்த சேலம்
சென்னை: அதிமுக அலுவலகத்திற்கு செல்வதற்கான தடை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு சென்றுள்ளார்.
Recommended Video
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் உயர்நீதிமன்றமோ அதிமுக பொதுக் குழு கூட்டம் அக்கட்சியின் சட்டவிதிகளின்படி நடக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஏமாற்றத்தை அளித்ததால் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அந்த பூட்டை உடைத்தனர். இதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தடுத்தனர்.

தள்ளுமுள்ளு
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வன்முறை ஏற்பட்டது. இதில் பலர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். இதையடுத்து வருவாய் துறையினர் அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

ஓபிஎஸ் மனு
இதையடுத்து ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக அலுவலகம் தனக்குத்தான் சொந்தம் என கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ்ஸுக்கு கண்டனம் தெரிவித்தது.

அலுவலக சாவி
இதையடுத்து அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்குமாறு வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது. மேலும் கட்சி அலுவலகத்திற்கு ஒரு மாத காலத்திற்கு தொண்டர்களும் தலைவர்களும் செல்வதற்கு தடையையும் நீதிமன்றம் விதித்தது.

ஜூலை 11 பொதுக் குழு
இந்த நிலையில் ஜூலை 11 பொதுக் குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் என்றும் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டம் செல்லாது என்றும் உத்தரவிட்டது.

ஓபிஎஸ் அழைப்பு
இந்த நிலையில் அதிமுகவினர் அனைவரும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால் எடப்பாடியோ இவருடன் எப்படி செல்ல முடியும் என கேள்வி எழுப்பி ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்திரு்நதார்.

அலுவலக சாவியுடன் எடப்பாடி
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நீதிமன்றம் விதித்த தடை முடிந்தவுடன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தடை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அலுவலக சாவியை எடுத்துக் கொண்டு நேற்று இரவு சேலத்திற்கு புறப்பட்டு சென்றார்.

அதிகாலையில் ஆலோசனை
அதிகாலை வீட்டுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு செம்மலை உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு செல்வது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பொதுக் குழு தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்த நிலையில் மீண்டும் பொதுக் குழுவை கூட்டலாமா என்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications